உயிரை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு வித்தியாசமான முறையில் மரியாதை செலுத்திய இங்கிலாந்து பிரதமர்!
Biris johnson named doctors name to son

இங்கிலாந்தின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது உயிரை காப்பாற்றிய இரண்டு மருத்துவர்களின் பெயர்களை தனது மகனுக்கு சூட்டி மரியாதை செலுத்தியுள்ளார்.
உலகத்தையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனையும் விட்டுவைக்கவில்லை. கொரோனா தொற்றால் அவதிப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது குணமான அவர் தனது வேலைகளை கவனிக்க துவங்கியுள்ளார்.
மேலும் சமீபத்தில் போரிஸ் மற்றும் அவரது காதலி சைமண்ட்ஸிற்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது அந்த குழந்தைக்கு வில்ஃபிரெட் லாரி நிக்கோலஸ் என பெயர் வைத்துள்ளனர்.
இந்த பெயருக்கான விளக்கத்தையும் சைமண்ட்ஸ் குறிப்பிட்டுள்ளார். அதில் வில்ஃபிரெட் என்பது போரிஸின் தாத்தா பெயர் என்றும் லாரி என்பது சைமண்டஸின் தாத்தா பெயர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்ததாக போரிஸூக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் நிக் பிரைஸ் மற்றும் நிக் ஹார்ட் இருவரின் பெயரை இணைத்து கடைசியாக நிக்கோலஸ் என பெயர் வைத்துள்ளதாக சைமண்ட்ஸ் விளக்கமளித்துள்ளார்.