×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கொரோனா வைரஸ் உயிர்பயம்! சீனாவில் சிக்கியுள்ள எங்கநாட்டு மக்களை மீட்கமுடியாது! அதிரடியாக கைவிட்ட நாடு!

bangladesh leave try for rescue people from china

Advertisement

சீனாவில் வுஹான் நகரத்தில் உருவான கொரோனா வைரஸ் தற்போது 25 மேற்பட்ட நாடுகளிலும் தீவிரமாக பரவி வருகிறது. மேலும் இந்த கொடூர கொரோனா வைரஸால் 814க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.மேலும் உலகளவில் 37000க்கும் அதிகமான பேர் வைரசால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும் கொரோனா வைரஸ்க்கு  இதுவரை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கவில்லை. இந்நிலையில் வைரஸ் பரவாமல் தடுக்க சீன அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பல நாட்டினரும், சொந்த தாயகத்திற்கு திரும்ப அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சீனாவில் வசித்துவந்த வங்கதேசத்தை சேர்ந்த 15 குழந்தைகள் உள்ளிட்ட 312 பேர், கடந்த 1ஆம் தேதி முதல் கட்டமாக அரசு விமான நிறுவனமான பிமான் ஏர்லைன்ஸ் மூலம் மீட்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். 

அவர்களை தொடர்ந்து இன்னும் 171 பேர் சீனாவில் சிக்கியுள்ளனர். 
இந்நிலையில் அவர்களை மீட்க இரண்டாவது கட்டமாக வங்கதேச அரசு விமானத்தை ஏற்பாடு செய்தது. ஆனால் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு பயந்து விமானிகள் மற்றும் விமான ஊழியர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். 

 இந்நிலையில் வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் இதுகுறித்து கூறுகையில் விமானிகள் மற்றும் விமான ஊழியர்கள் விமானத்தை இயக்க மறுக்கின்றனர். இந்நிலையில் சீனாவில் இருக்கும் வங்கதேச மக்களை அழைத்துவர இப்போது எந்த விமானத்தையும் அனுப்ப முடியாது. இந்நிலையில் சீனாவில் சிக்கியிருக்கும் வங்கதேச மக்கள் சிறிது காலம் காத்திருக்க வேண்டும்.  அவர்களுக்கு தேவையான உணவு குடிநீர் ஆகியவற்றை சீன அரசுகள் வழங்கி வருகின்றனர் . இந்நிலையில் பற்றாக்குறை ஏற்பட்டது என கூறுவது மிகவும் தவறாகும். இப்போதைய சூழ்நிலையில் அவர்களை மீட்க முடியவில்லை. ஆனால் விரைவில் மீட்போம் என கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Coronovirus #bangladesh #china
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story