இதெல்லாம் தேவையா? பயத்தில் புள்ள படுற பாட்டை பாருங்க... ராட்சத பாம்பின் மீது பெண் குழந்தை! அதிர்ச்சி வீடியோ...!!!
ராட்சத பைதான் பாம்பின் மீது குட்டி பெண் குழந்தையை படுக்க வைத்து எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பெற்றோருக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
சமூக வலைத்தளங்களில் அதிக லைக்குகள் மற்றும் வியூஸ்களை பெறும் நோக்கில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ தற்போது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராட்சத பைதான் பாம்பின் மீது குட்டி பெண் குழந்தையை படுக்க வைத்து படம் பிடித்த காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைக் கண்ட பலரும் பெற்றோரின் பொறுப்பற்ற செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பாம்பின் மீது படுத்த சிறுமி
'ரியல் டார்ஜான்' என அறியப்படும் பிரபல அமெரிக்க இன்ஃப்ளூயன்சர் மைக் ஹோல்ஸ்டன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், ஒருவர் பெரிய பைதான் பாம்பை தூக்கி வந்து குழந்தையின் மேல் வைப்பது காணப்படுகிறது. அதன்பின் அந்தச் சிறுமி எந்த அச்சமும் இன்றி பாம்பின் மீது படுத்துக் கொள்கிறாள்.
மனிதர்களுக்கும் ஆபத்தான வகை
வீடியோவில் இடம்பெற்றிருப்பது உலகின் மிக நீளமான பாம்பு இனங்களில் ஒன்றாகக் கருதப்படும் 'ரெட்டிகுலேட்டட் பைதான்' வகை என கூறப்படுகிறது. இந்த வகை பாம்புகள் 31 அடி நீளம் வரை வளரக்கூடியவை. மேலும் 150 கிலோ வரை எடை கொண்டிருக்கும். வலிமையான உடல் அமைப்பைக் கொண்ட இவை பெரிய விலங்குகளை கூட இறுக்கிப் பிடித்து வேட்டையாடும் திறன் உடையவை.
பெற்றோருக்கு எதிராக நெட்டிசன்கள் கண்டனம்
வைரல் வீடியோ வெளியானதைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. 'ஒருவேளை பாம்பு ஆக்ரோஷமாக நடந்துகொண்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்?', 'குழந்தையின் உயிரை ஆபத்தில் இட்டுள்ளனர்' என்று பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். சிலர் சம்பந்தப்பட்ட பெற்றோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குழந்தைகளின் பாதுகாப்பை மீறும் இதுபோன்ற செயல்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: நம்பவே முடியல... பிறந்த கொஞ்ச நேரத்துலயே கையை ஊன்றி உட்கார்ந்த குழந்தை! அதிர்ச்சியில் உறைந்து போன நர்ஸ்.... தீயாய் பரவும் வீடியோ!!!