பெண் இரட்டையர்களின் வினோத ஆசை.. ஒரே நேரத்தில் ஒரே ஆணின் மூலம் கர்ப்பம்.!
Australia Twins different dream

ஆஸ்திரேலியாவின் பெர்த் மாகாணத்தை சேந்தவர்கள் இரட்டை சகோதரிகளான அன்னா மற்றும் லூசி. இவர்கள் இருவரும் மற்ற இரட்டைகளை போல் இல்லாமல் உடல் மற்றும் முகபாவனைகளிலும் ஒத்த இருக்க வேண்டும் நினைத்து இதுவரை 14 அறுவை சிகிச்சை வரை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இரட்டையர்கள் இருவரும் தங்களது வாழ்நாள் முழுவதும் இணை பிரியாமல் இருக்க ஒருவருடன் இணைந்து தங்களது வாழ்நாளை கழிக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளனர்.
அதன்படி பென் பைர்ன் என்பவரை இருவரும் திருமணம் செய்து மூன்று பேரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் இரட்டையர்கள் இருவரும் சிறுவயது முதல் ஒன்றாக தூங்குவது, ஒன்றாக உண்பது, ஒரே நேரத்தில் மற்ற அனைத்து வேலைகளையும் செய்வது என அனைத்திலும் ஒன்றாகவே இருந்து வந்துள்ளனர்.
தற்போது தனது கணவரான பென் பைர்ன் மூலம் ஒன்றாகவே கர்ப்பம் தரிக்க வேண்டும் என வினோத ஆசைப்பட்டுள்ளனர். அதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளனர். அதாவது பென் பைர்னின் விந்துவை எடுத்து ஐ.வி.எப் மூலம் ஒரே நேரத்தில் கர்ப்பம் தரிக்க முடிவு செய்துள்ளனர்.