இரண்டு ஆண்டுகள் கழித்து டெலிவரி பாய் போல வந்த பேரன்! மகிழ்ச்சியில் பாட்டி செய்த செயலையெல்லாம் பாருங்க.. நெகிழ்ச்சி வீடியோ இதோ...
இரண்டு ஆண்டுகள் கழித்து டெலிவரி பாய் போல வந்த பேரன்! அதிர்ச்சியில் படுத்து அழுது கட்டித்தழுவி ஆனந்த கண்ணீர் விட்ட பாட்டி! நெகிழ்ச்சி வீடியோ இதோ...
இணையத்தில் தற்போது ஒரு உணர்ச்சி மிகுந்த வீடியோ மிக வேகமாக வைரலாகி வருகிறது. இரண்டு ஆண்டுகளாக இராணுவத்தில் சேவையாற்றிய பேரன், தன் பாட்டி, தாத்தாவை சந்திக்க வீட்டுக்குத் திரும்புகிறார். ஆனால் அவர் அமேசான் டெலிவரி ஊழியராக வேடமணிந்து கதவைத் தட்டுகிறார்.
அவரை எதிர்பாராதபோது கதவைத் திறந்த பாட்டி, பேரனைப் பார்த்ததும் அதிர்ச்சி மற்றும் மகிழ்ச்சியில் தரையில் உட்கார்ந்துவிடுகிறார். அந்த நொடியில் பாட்டியின் கண்களில் காணும் பாசமும், மகிழ்ச்சியும் பார்ப்பவரை உணர்வில் ஆழ்த்தும் வகையில் காணப்படுகிறது.
இந்த வீடியோவை TikTok-ல் “annaliseryan9” என்ற பயனர் மற்றும் X தளத்தில் பகிர்ந்துள்ளார். நெட்டிசன்கள், “இது தான் உண்மையான பாசம்”, “பாட்டியின் முகத்தில் காணும் உணர்வு பேரனுக்குள்ள உறவின் ஆழத்தைக் காட்டுகிறது” என உணர்வுபூர்வமான கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: Video : கல்லூரி வளாகத்தில் தீக்குளித்து அங்குமிங்கும் ஓடிய B. Ed மாணவி! பாலியல் தொல்லை செய்த துறைத் தலைவர்! பதைப்பதைக்கும் வீடியோ....
இத்தகைய வீடியோக்கள் குடும்ப பாசத்தின், இராணுவ உறவுகளின் முக்கியத்துவத்தையும், மீள்கூடல் தருணங்களின் நெகிழ்வையும் வெளிப்படுத்துகிறது. குறிப்பாக, சேவை முடிந்து வீட்டிற்கு திரும்பும் அந்த பொன்மனிதர்கள், குடும்பத்தினர் வாழும் அந்த சந்தோச தருணங்களை வீடியோவாகப் பதிவு செய்வது அனைவரையும் நெகிழ வைக்கிறது.
இதையும் படிங்க: Video : லண்டனில் பயணிகளுடன் புறப்பட்டு மேலே பறப்பதற்குள் திடீரென வெடித்த விமானம்! வெளியான அதிர்ச்சி வீடியோ..