×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வாரத்தில் நான்கரை நாட்கள் மட்டுமே இனி வேலை நாள்.. அசத்தல் அறிவிப்பு.!

வாரத்தில் நான்கரை நாட்கள் மட்டுமே இனி வேலை நாள்.. அசத்தல் அறிவிப்பு.!

Advertisement

ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபி, அஜ்மான், புஜைரா, சார்ஜா, துபாய், ராஸ் அல் கைமா, உம் அல் குவைன் ஆகிய 7 அமீரகத்தை உள்ளடக்கியது. தலைநகராக அமீரகம் விளங்கி வருகிறது. பெரும்பாலான முஸ்லீம் நாடுகளில் வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாக உள்ளதைப்போல, அமீரகத்தில் வெள்ளிக்கிழமை விடுமுறை ஆகும். 

அங்கு பணியாற்றி வரும் அரசு ஊழியர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை வேலை நாட்களாகவும், வெள்ளிக்கிழமை ஒரு நாள் விடுமுறையாகவும் இருக்கிறது.

பல வருடமாக இந்நடைமுறை தொடர்ந்து வரும்  நிலையில், பல தனியார் நிறுவனமும், பள்ளிக்கூடமும் இதனையே பின்பற்றி வருகிறது. இந்த நிலையில், வேலை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களை ஐக்கிய அரபு அமீரகம் மாற்றி அறிவித்துள்ளது. இதன்படி, வேலை நாட்கள் 6 நாளில் இருந்து நான்கரை நாளாக குறைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

மேற்கத்திய நாடுகளை போல, ஐக்கிய அரபு அமீரகத்திலும் இனி திங்கள் முதல் வெள்ளி வரை வேலை நாட்கள் ஆகும். வெள்ளிக்கிழமை இஸ்லாமிய மக்களின் புனித நாள் என்பதால், அன்று அரைநாள் மட்டும் வேலைநாளாக இருக்கும். 

இந்த நடைமுறை 2022 ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. திங்கள் கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை வேலை நேரமாக காலை 7.30 மணிமுதல் மாலை 3.30 மணிவரை கொடுக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை மட்டும் காலை 7.30 மணிமுதல் மதியம் 12 மணிவரை மட்டுமே வேலை நடைபெறும். 

வெள்ளிக்கிழமை மதியம் 1.15 மணிக்கு தொழுகை நிறைவு பெற்றதும், சனி மற்றும் ஞாயிறு சேர்ந்து இரண்டரை நாட்கள் விடுமுறை வழங்கபடுகிறது. வேலை - வாழ்க்கை சமநிலையை அதிகரிக்க, சமூக நல்வாழ்வை மேம்படுத்த புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

உலகளவில் 5 நாட்களாக வேலை நாட்கள் இருக்கும் நிலையில், உலகிலேயே முதல் நாடாக வாரத்தில் நான்கரை நாட்கள் பணிநாட்களாக அறிவித்து ஐக்கிய அரபு அமீரகம் சாதனை புரிந்துள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Arab Emirates #world #Working Day #Govt employees
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story