×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்ன அக்கிரமம்.? நடுவானில் பறந்த விமானத்தில் பெண் செய்த காரியம்... வீடியோ இணைப்பு.!

என்ன அக்கிரமம்.? நடுவானில் பறந்த விமானத்தில் பெண் செய்த காரியம்... வீடியோ இணைப்பு.!

Advertisement

அமெரிக்காவைச் சார்ந்த பெண் பயணி ஒருவர் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது  தனது இருக்கைக்கு அருகிலேயே சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் பரவி பலரும் விமான நிறுவனத்தின் பணிப்பெண்களுக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.

அமெரிக்காவைச் சார்ந்த ஸ்பிரிட் என்ற விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கிறது. அந்த விமானத்தில் பயணம் செய்த ஆப்பிரிக்கா அமெரிக்க பெண்மணி விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது தனது இருக்கைக்கு அருகிலேயே சிறுநீர்  கழித்திருக்கிறார்.

இது தொடர்பாக தெரிவித்துள்ள அவர் தான் 2 மணி நேரமாக கழிவறையை பயன்படுத்த கேட்டுக் கொண்ட போதும் விமானப்படை பெண்கள் தன்னை அனுமதிக்கவில்லை என்றும் அதனால்தான் விமானத்திலேயே சிறுநீர் கழித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி  மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் அந்த விமானத்தில் இருந்த பலரும் அந்தப் பெண்ணிற்கு ஆதரவாகவும் எதிராகவும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்திருக்கின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#world #America #sprit airlines #woman peed inside flight #Shocking
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story