அச்சச்சோ.. ரோலர் கோஸ்டர் பயணத்தில் உயிர் பயத்தை கண்ட பயணிகள்; 3 மணிநேரம் அந்தரத்தில் திக்., திக்..!
அச்சச்சோ.. ரோலர் கோஸ்டர் பயணத்தில் உயிர் பயத்தை கண்ட பயணிகள்; 3 மணிநேரம் அந்தரத்தில் திக்., திக்..!
அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் மாகாணம், பாரஸ்ட் கவுண்டி பகுதியில் தீம் பார்க் செயல்பட்டு வருகிறது. இந்த தீம் பார்க்கில் ரோலர் கோஷ்டர் பயணத்தின் போது, திடீரென இயந்திரவியல் கோளாறு ஏற்பட்டது.
நடுவழியில் தலைகீழாக பயணித்தபோது ரோலர் கோஸ்டர் நின்றுபோனதால், பயணிகள் அனைவரும் உயிரை எண்ணி அலறி இருக்கின்றனர்.
இதனையடுத்து, தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு படையினர், முதலில் குழந்தைகளை பத்திரமாக மீட்டனர். பின்னர் 3 மணிநேரம் எடுத்துக்கொண்டு ஒவ்வொருவராக மீட்கப்பட்டனர்.