அடக்கொடுமையே... வாழ்க்கையில் ஒருமுறை அல்ல, 20 முறை..! சிறுவர்கள் "ஆண்" என்ற பெயர் எடுக்க அமேசான் காட்டில் அனுபவிக்கும் அவஸ்தை இதுதான் !!!
பிரேசிலின் அமேசான் காடுகளில் பழங்குடியின சிறுவர்கள் ‘புல்லட் எறும்புகள்’ கையுறை சடங்கில் 10 நிமிடங்கள் வலியைத் தாங்கி வீரத்தைக் நிரூபிக்கின்றனர்.
உலகின் மிகவும் அதிர்ச்சியூட்டும் பழங்குடியினர் மரபுகளில் ஒன்றாக கருதப்படும் அமேசான் காட்டு சடங்கு மீண்டும் கவனம் ஈர்த்துள்ளது. பிரேசிலின் அடர்ந்த காடுகளில் வாழும் சிறுவர்கள், தங்களை உண்மையான ஆண்களாக நிரூபிக்க இந்த கொடூரமான சோதனையை எதிர்கொள்கிறார்கள் என்பது உலகையே அதிர்ச்சியடையச் செய்கிறது.
அமேசான் காடுகளின் அதிர்ச்சிகரமான மரபு
பிரேசிலின் அமேசான் காடுகள் பகுதியில் வாழும் பழங்குடியின சிறுவர்கள், ஒரு சிறப்பு சடங்கின் மூலம் சமூக அங்கீகாரம் பெறுகின்றனர். இந்தச் சடங்கில் நூற்றுக்கணக்கான புல்லட் எறும்புகள் அடைக்கப்பட்ட கையுறைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த எறும்பு கடியின் வலி, துப்பாக்கி குண்டு உடலில் பாய்வதற்கு ஒப்பானதாக இருப்பதால் தான் இதற்கு அந்தப் பெயர் வந்துள்ளது.
10 நிமிடங்கள் உயிரைப் பறிக்கும் வலி
தேனீ கொட்டுவதை விட சுமார் 30 மடங்கு அதிக வலியை தரும் இந்த எறும்புகள் நிறைந்த கையுறையை, சிறுவர்கள் சுமார் 10 நிமிடங்கள் அணிந்திருக்க வேண்டும். அந்த நேரத்தில் அவர்கள் அழவோ, வலியால் துடிக்கவோ கூடாது. அப்படி செய்தால் பலவீனமாக கருதப்படுவார்கள். மனவலிமை மற்றும் உடல் சக்தி இரண்டும் இந்த சோதனையில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
விஷத்தின் தாக்கம் மற்றும் வீர அங்கீகாரம்
எறும்புகளின் விஷம் உடலில் பரவுவதால் கைகள் தற்காலிகமாக செயலிழக்கின்றன. பல நாட்கள் உடல் நடுக்கத்துடன் காணப்படும். ஒருவரை முழுமையான வீரனாக அங்கீகரிக்க, இந்த சோதனையை வாழ்க்கையில் சுமார் 20 முறை சந்திக்க வேண்டும் என்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
கஷ்டங்களை அனுபவித்தால்தான் வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையே இந்த மரபின் அடிப்படை. மனித மனவலிமையின் உச்சத்தை சோதிக்கும் இந்த சடங்கு, உலகளவில் கலாச்சார விவாதத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க: 30 வயது பெண்ணுக்கு விபத்தில் துண்டான காது!அந்த காதை காலில் வைத்து தைத்த மருத்துவர்கள்! இதுதான் காரணமா? சவாலான சிகிச்சை சம்பவம்..!!!