நடுவானில் பறந்த விமானத்தில் பற்றி எரிந்த தீ! அலறி கூச்சலிட்ட பயணிகள்... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!
சீனாவில் இருந்து புறப்பட்ட ஏர் சீனா விமானத்தில் நடுவானில் லித்தியம் பேட்டரி வெடிப்பால் தீப்பற்றி அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது. பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
உலகளவில் விமானப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், சீனாவில் இருந்து புறப்பட்ட ஒரு ஏர் சீனா விமானத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டாலும் இந்த நிகழ்வு பாதுகாப்பு நடைமுறைகளை மீண்டும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
வானில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
சீனாவின் செஜியாங் மாகாணம் காங்சூ நகரிலிருந்து தென்கொரியாவின் தலைநகர் சியோலுக்குச் சென்ற Air China விமானம் நேற்று காலை புறப்பட்டது. அதில் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். விமானம் நடுவானில் பறந்துக்கொண்டிருந்தபோது, பயணிகள் இருக்கையின் மேல் உள்ள உடைமைகள் வைக்கும் பகுதியிலிருந்து திடீரென புகை எழுந்தது.
சில விநாடிகளில் தீப்பற்றி எரிந்த பகுதி
சில நொடிகளில் அந்த பகுதி தீப்பற்றி எரிந்ததால் பயணிகள் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டு எழுந்தனர். உடனடியாக விமான பணியாளர்கள் தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தி தீயை கட்டுப்படுத்தினர். அதிர்ஷ்டவசமாக எந்த பயணிக்கும் காயம் ஏற்படவில்லை.
இதையும் படிங்க: 173 பயணிகளுடன் சென்ற விமானத்தில் திடீர் தீ விபத்து..! வைரல் வீடியோ..
அவசர தரையிறக்கம் மற்றும் விசாரணை
பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக விமானம் ஷாங்காய் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில், ஒரு பயணியின் பையில் இருந்த லித்தியம் பேட்டரி அதிக வெப்பத்தால் வெடித்ததே இந்த விபத்திற்குக் காரணம் என்பது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, உலகளவில் விமானப் பாதுகாப்பு எப்படி மேம்படுத்தப்பட வேண்டும் என்ற விவாதத்தை தூண்டியுள்ளது. பயணிகள் உயிர் பிழைத்தது மகிழ்ச்சியளிக்கும் நிலையில், இத்தகைய சம்பவங்களுக்கு எதிராக மேலும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியமாக்கப்படுகின்றன.
இதையும் படிங்க: ஷாக் நியூஸ்! சென்னையில் மின்சாரம் பாய்ந்து தூய்மை பணியாளர் உயிரிழப்பு! பெரும் சோகம்...