×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தாலிபான்களிடம் இருந்து தப்பியது இப்படித்தான் - ஆப்கான் பெண்கள் கால்பந்து அணியின் வீராங்கனை பேட்டி.!

தாலிபான்களிடம் இருந்து தப்பியது இப்படித்தான் - ஆப்கான் பெண்கள் கால்பந்து அணியின் வீராங்கனை பேட்டி.!

Advertisement

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்கப்படை வெளியேற்றியதை தொடர்ந்து, தலிபான் அமைப்பினர் ஆட்சி அதிகாரத்தினை கைப்பற்றினர். அதனைத்தொடர்ந்து, தற்போது தலிபான் அமைப்பு தரப்பில் ஆட்சி நடந்து வரும் நிலையில், ஐ.எஸ் மற்றும் தலிபான் அமைப்பின் கூட்டாட்சி நடைபெறுகிறது. இந்த அரசை உலக நாடுகள் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்காத நிலையில், சீன அதற்கான அங்கீகாரத்தை மறைமுகமாகவும், நேரடியாகவும் மேற்கொண்டுள்ளது. 

கடந்த 40 வருட ஆப்கானிய போரின் காரணமாக அந்நாடு கடுமையான பொருளாதார சரிவை சந்தித்த நிலையில், பல நாடுகளின் உதவியின் காரணமாக ஓரளவு பிரச்சனை இல்லாமல் இயங்கியது. தற்போது அத்தியாவசிய பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். 

தலிபான்களின் ஆட்சிக்கு முன்னதாக ஆப்கான் பெண்கள் கால்பந்து அணி பிரபலமாக இருந்த நிலையில், கால்பந்து அணியில் பெண்கள் இருப்பது தால்பங்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. கால்பந்து விளையாட்டு அன்றைய நாட்களில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு நிலையில், தற்போது அணியில் இருந்த பெண் வீராங்கனைகளுக்கு அது பிரச்சனையாக அமைந்துள்ளது. 

ஆப்கானிஸ்தானின் தேசிய இளைஞர் அணியை சார்ந்த 24 வயது செல்சியா பன் சபோரியா மற்றும் அவரது அணி வீரர்கள் தலிபான்களின் கட்டுப்பாட்டில் வாழ்ந்து பின்னர் தப்பி இருக்கின்றனர். இங்கிலாந்து நாட்டில் உள்ள விடுதியில் கால்பந்தாட்ட பெண்கள் குழு மற்றும் அவர்களின் உறவினர்கள் தங்கியிருக்கும் நிலையில், ஆங்கில பத்திரிகைக்கு சபோரியா பேட்டி அளித்துள்ளார். 

இந்த பேட்டியில், "தலிபான்கள் அமைப்பினர் ஹெராத்துக்கு வந்த சமயத்தில், நான் எனது பணியிட வேலையை முடித்திருந்தேன். எனது கணவர் என்னை அழைத்து செல்ல வந்த தருணத்தில், தெருக்களில் ஒவ்வொருவரும் தாலிபனாக இருந்தார்கள். கண்மூடித்தனமாக சுட்டார்கள். இதனால் அனைவருக்கும் பயம் ஏற்பட்டது. பெண்கள் கால்பந்தாட்ட வீரராக இருப்பதால், வெளியே செல்ல முடியாமல் தவித்துப்போயினர். 

பின்னர், தப்பிக்க திட்டமிட்டு, அனைவரும் தலைநகர் காபூலில் உள்ள தங்கும் விடுதிக்கு சென்றோம். அங்கும் தலிபான்கள் இருந்தார்கள். காபூலில் 30 நாட்கள் தப்பிக்க வழியில்லாமல் அவதிப்பட்டு, எங்களின் முகத்தை  மறைத்து சென்றோம். காபூல் விமான நிலையத்திற்கு செல்லும் போதும், தெருவில் பர்கா அணிந்து பல போராட்டத்திற்கு பின்னர் தாலிபான்களிடம் இருந்து தப்பினோம்" என்று தெரிவித்தார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Afghanistan #Taliban Terrorist #world #Afghanistan Football #England
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story