×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பரபரப்பு... பெண்கள் அழகு நிலையங்களுக்கு தடை... பகீர் ரிப்போர்ட்!

பரபரப்பு... பெண்கள் அழகு நிலையங்களுக்கு தடை... பகீர் ரிப்போர்ட்!

Advertisement

போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது தாலிபான்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது .இதன் காரணமாக அங்கு கடுமையான பழமைவாத சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது . இதற்காக உலகம் முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பி இருக்கும் நிலையில் மேலும் ஒரு பழமை வாத சட்டத்தை அந்நாட்டு தாலிபான் அரசு நிறைவேற்றி இருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் நீண்ட காலமாக நிலவி வந்த உள்நாட்டு போருக்கு பிறகு ஜனநாயக ரீதியிலான ஆட்சி அமைந்தது. அதனைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்கா மற்றும் மேட்டூர் படைகள் வெளியேறிய நிலையில்  தாலிபான்கள் மீண்டும் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றி  நாட்டை ஆண்டு வருகின்றனர்.

இதனால் அங்கு பலவிதமான பழமை வாத சட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன  இந்நிலையில் அழகு சாதன நிலையங்களை நடத்துவதற்கும் தடை விதித்திருக்கிறது ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசு . இது தொடர்பான வாய்மொழி அறிக்கை ஒன்றும் வெளியாகி இருக்கிறது . தாலிபான அரசின்  துணை மற்றும் நல்லொழுக்க அமைச்சகத்தின் அமைச்சர் முகமது அக்கிப்   மஹ்ஜர்  செய்தியாளர்களின் சந்திப்பின்போது இதனை தெரிவித்து இருக்கிறார்.



இதனைத் தொடர்ந்து அழகு கலை கலைஞர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். இந்த சட்டம் தற்போது கிராமப்புறங்களில் இருந்து காபூல் போன்ற பெரிய நகரங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது. இது பற்றி பேசிய அழகு கலை நிபுணர் ஒருவர்  ஆண்கள் வேலை இருந்தாலும் வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறார்கள்  எங்களையும் வேலை செய்யவிடாமல் இது போன்ற சட்டங்களை இயற்றினால் பசியால் சாகவேண்டும் என விரக்தியுடன் தெரிவித்து இருக்கிறார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#world #Afghanistan #taliban #banbeautysaloon #Shocking
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story