தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சீரியஸாக பேசிய அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்-ஐ கலாய்த்தநடிகர் சித்தார்த்.!

சீரியஸாக பேசிய அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்-ஐ கலாய்த்தநடிகர் சித்தார்த்.!

actor siddharth teasing america president donald trump Advertisement


அமெரிக்கா - ஈரான் இடையே வார்த்தைப் போர் முற்றியுள்ள நிலையில், ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கருத்தை நடிகர் சித்தார்த் ட்விட்டரில் கலாய்த்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான சித்தார்த், சமூக வலைதளங்களில் எப்போதுமே சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். ரசிகர்களுடன் உரையாடுவது, அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பது என பிசியாக இருக்கும் சித்தார்த் அவ்வப்போது பொதுவான கருத்துக்களை பகிர்ந்தும், கிண்டல் செய்தும் வருகிறார்.

America

 அந்த வகையில் நேற்று அமெரிக்க  அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் அதிபருக்கு விடுத்த எச்சரிக்கையை குறிப்பிட்டு டொனால்ட் டிரம்ப்பை, சித்தார்த் ட்விட்டரில் கலாய்த்துள்ளார்.

அதில் ஈரான் அதிபர் ரவுகானிக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப், ‘அமெரிக்காவை மீண்டும் மிரட்ட நினைத்தால் வரலாறு முழுக்க சில நாடுகள் அடைந்த  வேதனையை எதிர்கொள்ள நேரிடும். வன்முறை மற்றும் மரணங்களை காட்டி நீங்கள் மிரட்டுவதை பொறுத்துக்கொள்ளும் நாடாக அமெரிக்கா இனி ஒருபோதும்  இருக்காது. எச்சரிக்கையாக இருங்கள்’ என்று ஆங்கிலத்தில் கேப்பிட்டல் எழுத்துகளில் பதிவிட்டிருந்தார். 



இந்நிலையில் டிரம்ப்பின் அந்த ட்விட்டை குறிப்பிட்டு, ‘உங்களுடைய கேப்ஸ் லாக் பட்டன் ஆன் ஆகியிருக்கிறது’ என்று கிண்டல் செய்துள்ளார் நடிகர்  சித்தார்த்.


Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#America
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story