×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வைரல் வீடியோ: பட்டத்துடன் சேர்ந்து அந்தரத்தில் பறந்துசென்ற 3 வயது சிறுமி..! பார்ப்போரை நடுங்கவைக்கும் அதிர்ச்சி வீடியோ காட்சி.!

A child in Taiwan was caught in a kite and swept high into the air

Advertisement

தைவான் நாட்டில் நடந்த பட்டம்விடும் திருவிழா ஒன்றில் மிகப்பெரிய பட்டம் ஒன்றில் சிக்கிக் கொண்ட 3 வயது சிறுமி 100 அடி தூரம் வரை பறந்து சென்ற சம்பவம் வீடியோவாக வெளியாகி பார்ப்போரை பதற வைத்துள்ளது. 

தைவான் நாட்டின் நான்லியோ கடற்கரையில் படம்பிடும் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த திருவிழாவில் கலந்து கொண்ட ஏராளமான மக்கள் பல்வேறு பட்டங்களை பறக்கவிட்டு திருவிழாவை மகிழ்ச்சியாக கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்போதும் மிகப்பெரிய பட்டம் ஒன்றை பறக்க விட இருந்த நிலையில் படத்தின் நுனியில் 3 வயது சிறுமி ஒருவர் சிக்கிக் கொண்ட நிலையில் அந்த படம் நூறு அடிக்கு மேல் அந்த சிறுமியுடன் சேர்ந்து பறந்துள்ளது. 

கீழே இருந்தவர்கள் பயத்தில் கத்தி கூச்சல் இடும் போது கூட சிறுமி அந்த பட்டத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டு படத்துடன் சேர்ந்து காற்றில் பிறந்துள்ளார். சிறிது நேரத்தில் பட்டம் கீழே இறங்கியதும் அங்கு தயாராக இருந்த மக்கள் சிறுமியை படத்தில் இருந்து கீழே விழாமல் தாங்கிப் பிடித்தனர். 

இந்த எதிர்பாராத சம்பவத்தில் சிறுமிக்கு ஒரு சில காயங்கள் ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை நடைபெற்றது. அதேநேரம் திருவிழாவும் உடனடியாக நிறுத்தப்பட்டது. சிறுமி பட்டத்தில் பறந்து செல்லும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியது பார்ப்போரை அதிர்ச்சியில் உறைய வைக்கும் விதமாக உள்ளது. இதோ அந்த வீடியோ காட்சி.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#viral video
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story