×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

செஸ் விளையாட்டின் போது நடந்த விபரீதம்! 7 வயது சிறுவனின் விரலை உடைத்த ரோபோ! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

செஸ் விளையாட்டின் போது நடந்த விபரீதம்! 7 வயது சிறுவனின் விரலை உடைத்த ரோபோ! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

Advertisement

மாஸ்கோவில் செஸ் ஓபன் போட்டியில் ரோபோவுடன் ஏழு வயது சிறுவன் செஸ் விளையாடிய போது அவனது கை விரல் உடைக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில் சிறுவன் ரோபோவுக்கு எதிரே அமர்ந்து செஸ் விளையாடிக் கொண்டு இருக்கிறான். அப்பொழுது ரோபோ தனக்கான வாய்ப்பில் காயை நகர்த்துகிறது. அபபொழுது சிறுவனும் காயை நகர்த்தியுள்ளான். இந்த நிலையில் சிறுவனின் கை விரல், ரோபோவால் நசுக்கப்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்தவர்கள் ரோபோவின் பிடியிலிருந்து சிறுவனின் கையை தீவிர முயற்சிக்கு பின் எடுத்துள்ளனர்.

இந்த நிகழ்வு குறித்து ரஷ்யாவின் செஸ் கூட்டமைப்பு சார்பில் கூறுகையில், சிறுவனுக்கு கை விரலில் முறிவு ஏற்பட்டுள்ளது. மேலும் விளையாட்டு விதிமுறைகளைச் சிறுவன் சரியாக பின்பற்றவில்லை. ரோபோ காய் நகர்த்தி முடிப்பதற்கு முன் சிறுவன் காயை நகர்த்த முயன்றதால் அவனது கை ரோபோவிடம் சிக்கியது. அவன் தற்போது நன்றாக உள்ளான். இது அரிதாக நடக்கும் செயல் என கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#robo #finger #chess
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story