தாய்க்கு பயந்து 5வது மாடியில் இருந்து குதித்த 6 வயது சிறுவன்..!
தாய்க்கு பயந்து 5வது மாடியில் இருந்து குதித்த 6 வயது சிறுவன்..!
சீனாவில் சிறுவன் ஒருவன் அவரது தாய்க்கு பயந்து ஐந்தாவது மாடியில் இருந்து குதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் சிறுவன் அவள் தாயுடன் அடுக்கு மாடி குடியிருப்பில் ஐந்தாவது தளத்தில் வசித்து வந்துள்ளான். இந்த நிலையில் அவரது தாய் அவரை கடுமையாக அடித்துள்ளார்
அவரது தாயின் அடியிலிருந்து தப்பிப்பதற்கு ஜன்னலின் வழியே சிறுவன் குதித்துள்ளான். இதனை அவரது அக்கம்பக்கத்து விட்டார் பார்த்துள்ளனர். பின்னர் சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதிதனர். அவரது தாய் அவரை கடுமையாக தாக்கினார், குச்சியால் அடித்துள்ளனர் அப்போது நாங்கள் அவரை அடிக்க வேண்டாம் என்று கெஞ்சியும் கேட்கவில்லை இதனால் தன்னை காப்பாற்றி கொள்ளவே சிறுவன் மாடியில் இருந்து குதித்தான் என்று தெரிவித்துள்ளனர்
மேலும், அவன் மாடியில் இருந்து குதிப்பதை காட்டிலும் அவரது தாயை பார்த்து தான் மிகவும் பயந்தார் என்று தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளான். ஆனால் அவரது உடம்பில் பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய சீனா காவல்துறை சிறுவன் கீழே விழுந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் அவரது தாய் அடித்துள்ளார் என்று கூறியிருக்கிறார். இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர்.