×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிரபலமான ஹோட்டலின் தோட்டத்தில் ஒரே உஷ் உஷ் சத்தம்! போய் பார்த்தால் ஒட்டுமொத்தமாக படம் எடுத்து, சீறி நின்ற தருணம்! பதறவைக்கும் வீடியோ வைரல்!

பிரபலமான ஹோட்டலின் தோட்டத்தில் ஒரே உஷ் உஷ் சத்தம்! போய் பார்த்தால் ஒட்டுமொத்தமாக படம் எடுத்து, சீறி நின்ற தருணம்! பதறவைக்கும் வீடியோ வைரல்!

Advertisement

"பாம்பை கண்டால் படையே நடுங்கும்” என்பது பழமொழி. ஆனால் ஒரே நேரத்தில் 18 நாகப்பாம்புகள் ஒன்றாக தோன்றினால் என்ன ஆகும்? இதுபோன்ற அதிர்ச்சிகரமான பாம்பு நிகழ்வு ராஜஸ்தானில் நடந்துள்ளது.

உதய்பூர் மாவட்டம் சோமஸ்ராம் நகரில் அமைந்துள்ள ஒரு பிரபலமான ஹோட்டலின் தோட்டத்தில், முதலில் ஒரு பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பிடிக்க பாம்பு பிடிப்பாளர் சமன் சிங் சவுகான் வந்தபோது, எதிர்பாராதவிதமாக மொத்தம் 18 நாகப்பாம்புகள் தோன்றியது. ஒட்டுமொத்தமாக பாம்புகள் படம் எடுத்து, சீறி நின்ற அந்த தருணம் ஹோட்டல் ஊழியர்களையும் வாடிக்கையாளர்களையும் பீதியுடன் ஓடச் செய்தது.

தொடர்ந்து பெய்து வரும் வட மாநில மழைகள், விஷப்பாம்புகள் மற்றும் விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு நுழைவதற்கான வாய்ப்பை அதிகரித்துள்ளன. முதலைகள் கூட வீடுகளில் சிக்கும் நிகழ்வுகள் நடந்துவருகின்றன.

இதையும் படிங்க: நெஞ்சுவலி காரணமாக சிகிச்சைக்கு சென்ற வாலிபர்! சிகிச்சைக்கு முன் திடீரென மயங்கி விழுந்து! சுமார் 41 நிமிடம் கழித்து தான் மீண்டும்.. வெளியான சிசிடிவி காட்சி!

இந்த பாம்பு கூட்டம் பெரிய பாறைகளுக்குள் ஒளிந்து கிடந்ததாக கூறப்படுகிறது. குப்பைகளை அகற்றும் போது மட்டுமே அந்த பயங்கரமான காட்சி வெளிவந்தது. பாம்புகளை பாதுகாப்பாக பிடித்து வெளியேற்றிய சமன் சவுகானின் செயல், சமூக ஊடகங்களில் பாராட்டுதலுக்குரியதாக மாறியுள்ளது.

 

இதையும் படிங்க: மருத்துவர்களை அடிக்கடி தாக்குவது அநீதி! பட்டப்பகலில் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டரை தாக்கிய அதிர்ச்சி சம்பவம்! வைரலாகும் வீடியோ....

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#18 cobras Rajasthan #நாக பாம்பு ஹோட்டல் #snake rescue Udaipur #somasram garden snakes #சமன் சிங் பாம்பு பிடிப்பு
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story