மகளிர்தினத்தன்று மனைவி கணவனிடம் என்ன எதிர்பார்ப்பார்கள் தெரியுமா?? மறக்காமல் செய்திடுங்கள்!!
womens day girls expectation

சர்வதேச மகளிர் தினம் (மார்ச் 8) இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள பெண்களுக்கு வாழ்த்துக்கள் கூறப்பட்டு வருகிறது.
சர்வதேச மகளிர் தினத்தில் வீட்டில் உள்ள உங்கள் அம்மா, சகோதரி, மனைவி, குழந்தை என அனைத்து பெண்களுக்கும் வாழ்த்துக்களை பகிருங்கள். அதேபோல் தோழி, உறவினர் என அனைவருக்கும் வாழ்த்துக்களை கூறுங்கள்.
மகளிர்தினத்தன்று வீட்டில் உள்ள பெண்களை எவ்வாறு மகிழ்விக்கவேண்டும் என்ற கேள்வி எழுகிறதா? கண்டிப்பாக மகளிர் தினத்தன்று மனைவிக்கு ஆசையாய் பூ வாங்கி கொடுத்தாலே அன்றைய தினம் முழுவதும் மகிழ்ச்சியடைவார்கள். அதேபோல் குழந்தைக்கும், தாய்க்கும் புத்தாடை எடுத்து கொடுத்தால் மிகவும் சந்தோச படுவார்கள்.
அலுவலகத்தில் பணிபுரியும் ஆண்கள். இன்று வீட்டிற்கு செல்லும்போது வெறும்கையை வீசி செல்லாதீர்கள். உங்களுக்காக தினம் தினம் உழைக்கும் உங்களது மனைவி கண்டிப்பாக இன்று கணவர் எதாவது வாங்கிவருவார் என எதிர்பார்ப்பார்கள். வாங்கிக்கொடுப்பதற்கு பணம் இல்லாவிட்டாலும், கடன் வாங்கியாவது ஒரு முழம் மல்லிகை பூ-வாவது வாங்கி கொடுங்கள்.