×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஒரு நொடி யோசிக்காமல் செய்யும் தவறால் கதறும் பெற்றோர்கள்.... ஓடும் ரயிலுக்கு அடியில் படுத்து வாலிபர் செய்த பயங்கரம்! கொந்தளிப்பை தூண்டும் திக் திக் வீடியோ!

சமூக வலைதள புகழுக்காக இளைஞர் ரயில் தண்டவாளத்தில் உயிரை ஆபத்தில் இட்ட வீடியோ வைரலாகி கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

சமூக வலைதளங்களில் ஒரு சில நொடிகள் புகழ் பெற வேண்டும் என்ற ஆவலில் இளைஞர்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ, இணைய பயனர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரயில் முன் படுத்த இளைஞர்

எக்ஸ் (X) தளத்தில் @ankurtweetsyo என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், ஒரு வாலிபர் அதிவேகமாக வரும் ரயிலுக்கு முன்பாக ரயில் தண்டவாளத்தில் குறுக்காக படுத்துக் கொள்கிறார். சில நொடிகளில் பயங்கரமாக பாய்ந்து வந்த ரயில் அவரது உடலின் மேலாகவே கடந்து செல்கிறது.

பதற வைக்கும் காட்சி

இந்த மரண அபாய தருணத்தை அவரது நண்பர் ஒருவர் மொபைல் போனில் பதிவு செய்கிறார். ரயில் முழுவதும் கடந்து சென்ற பிறகு, அந்த இளைஞர் உயிர் தப்பிய மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து, பெரிய சாதனை செய்தது போல கொண்டாடுகிறார். இந்த Viral Video பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: மானை வெறித்தனமாக வேட்டையாடத் துணிந்த சிங்கம்! ஆனால் இறுதியில் நடந்த ட்விஸ்ட்டை நீங்களே பாருங்க.... வைரல் வீடியோ!

நெட்டிசன்களின் கடும் கண்டனம்

சிறு தவறு நடந்திருந்தாலும் உயிரிழப்பு நிச்சயம் என்ற நிலை இருந்தபோதும், இப்படிப்பட்ட பாதுகாப்பற்ற செயல்களில் ஈடுபடுவது பொறுப்பற்றது என இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். "இவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்" என்றும், "ரீல்ஸ் மோகம் " இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்கிறது" என்றும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சமூக வலைதளங்களில் கிடைக்கும் லைக்குகள் மற்றும் பாராட்டுகள் வாழ்க்கையை விட பெரியதல்ல என்பதை இளைஞர்கள் உணர வேண்டிய நேரம் இது. ஒரு நிமிட சாகசம் உயிரிழப்பாக மாறும் அபாயம் இருப்பதை நினைவில் வைத்து, பொறுப்புடன் நடந்து கொள்வதே நலம் தரும்.

 

இதையும் படிங்க: கல்யாண பெண் மேக்கப்பை கலைத்ததும் தெரிந்த உண்மை! அய்யோ பாவம்... பையன் நிலைமை அப்போ... வைரலாகும் வீடியோ!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#viral video #சமூக வலைதளம் #Train Stunt #இளைஞர்கள் ஆபத்து #Reels culture
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story