பெண்ணின் தலைமுடியை இழுத்த குரங்கு! அதை பார்த்து மற்றொரு குரங்கு செய்த செயலை பாருங்க! வைரலாகும் வீடியோ!
பெண்ணின் தலைமுடியை இழுத்த குரங்கு! அதை பார்த்து மற்றொரு குரங்கு செய்த செயலை பாருங்க! வைரலாகும் வீடியோ!
உகாண்டாவின் மலைப்பகுதியில் சுற்றுலா சென்றிருந்த ஒரு பெண் பயணியருக்கும், அங்கு வசிக்கும் மவுண்டன் குரங்குகளுக்கும் இடையே நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வீடியோவில் நடந்த சம்பவம்
'Mountain Gorillas' என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட வீடியோவின் படி, அந்த பெண் பயணியின் தலைமுடியை ஒரு குரங்கு இழுத்து விளையாடுகிறது. இதைப் பார்த்த மற்றொரு குரங்கு, அது பெண் குரங்காக இருக்கலாம் என நினைத்து, தலைமுடி இழுத்த குரங்கிற்கு ஒரு அடி போட்டுத் தள்ளி விட்டு, அதனை கையில் இழுத்து அப்பால் அழைத்து செல்கிறது.
இந்த சம்பவம் சுற்றியிருந்த பயணிகள் அனைவரையும் சிரிப்பிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது. அதிலும் அந்த பெண் பயணியருக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல், அவர் உடனே சிரித்துவிட அவர் மனஅமைதியையும் காட்டியது.
இந்த காட்சி பார்த்த பலர், "மனிதர்களுக்கு போல் விலங்குகளுக்கும் காதல், பொறாமை போன்ற உணர்வுகள் இருக்கிறதா?" என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர். சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி இணையதள உலகமும் இந்த வீடியோவால் வெகுவாக ஈர்க்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் கலகலப்பான விமர்சனங்கள்
வீடியோ வைரலானதையடுத்து, சமூக வலைதளங்களில் பலரும் நகைச்சுவையுடன் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ வனவிலங்குகளின் உணர்வுபூர்வமான நடத்தை குறித்து உலகளவில் பேரளவிலான கவனத்தை பெற்றுள்ளது.