×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அதிர்ச்சி வீடியோ : வால் இல்லாத முதலையா? சாலையில் நிதானமாக நடந்து செல்லும் வீடியோ வைரல்...

வெறித்தனமான காட்சி! வால் இல்லாத முதலை சாலை கடக்கும் வீடியோ வைரலாகும்

Advertisement

தெற்கு லூசியானாவில் இடம்பெற்ற அசாதாரணக் காட்சி ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. வால் இல்லாத ஒரு முதலை மெதுவாக சாலையை கடந்து செல்கின்ற வீடியோ வைரலாகிறது.

முதலில் பலரும் அந்த உருவத்தைப் பார்த்து ஒரு பெரிய நாய் எனவே நினைத்தனர். ஆனால் அருகில் சென்று பார்ப்பவர்களுக்கு அது ஒரு முதலை என்பதை உணர்வது அதிர்ச்சியூட்டியது.

இந்த வீடியோவை ஃபேஸ்புக்கில் பகிர்ந்தவர் ஆஷ்லின் பார்த்தலோமியூ. பிளாகுமெயின்ஸ் பாரிஷில் உள்ள நெடுஞ்சாலை 23-ல் நடைபெற்ற இந்த காட்சியை அவர் பதிவு செய்துள்ளார். தனது குழந்தைகளை பேஸ்பால் பயிற்சிக்கு விட்டுவிட்டு வீடு திரும்பும் வழியில் இந்த வினோதமான தருணத்தை அவர் கண்டுள்ளார்.

இதையும் படிங்க: வைரல் வீடியோ: சைட்விண்டர் பாம்பை பார்த்துள்ளீர்களா? தன்னை தானே மணலில் புதைத்துக்கொள்ளும் பாம்பு! வைரலாகும் அதிசய காணொளி...

"அது ஒரு முதலைதானா அல்லது ஒரு பெரிய நாயா என்று எனக்கே சரியாகத் தெரியவில்லை," என்று அவர் பின்னர் உள்ளூர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். வீடியோவில் அவர் ஆச்சரியத்துடன் “என்ன?” என்று கூறும் குரலும் தெளிவாகக் கேட்கப்படுகிறது.

அதையடுத்து, பார்த்தலோமியூ ஃபேஸ்புக்கில் வீடியோவைப் பகிர்ந்து, “எல்லோரும் கவனமாக இருங்கள். ஒரு அரை முதலை சாலையில் நடந்து செல்கிறது” என்று எச்சரிக்கையுடன் தலைப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து ஆடோபான் மிருகக்காட்சிசாலையின் ஊர்வன நிபுணர் ராபர்ட் மெண்டிக் விளக்கம் அளித்துள்ளார். அவரது பேச்சு படி, இந்த முதலை மற்றொரு முதலையுடன் நடந்த சண்டையில் வாலை இழந்திருக்கலாம். இது போன்ற காயங்கள் முதலிகளுக்குப் பொதுவானவை என்றும், இவை வியக்கத்தக்க ரீதியில் மீண்டு வாழும் திறன் உடையவை என்றும் அவர் தெரிவித்துள்ளார். வாலில்லாமல் இருந்தாலும், அந்த முதலை நிதானமாக சாலையை கடக்கிறது.

இதையும் படிங்க: திருமண வீட்டுக்கு விருந்தினராக வந்த காண்டாமிருகம்! சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ...

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Alligator without tail #Louisiana viral video #Tail-less crocodile # #viral video
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story