படிப்பு தான் முக்கியம்! ஒரு கைப்பிடி இல்லை, சீட் இல்லை! ஆனால் தினமும் இந்த சைக்கிளில் பள்ளிக்கு செல்லும் சிறுவன்! 53 விநாடி! மனதை தொடும் காட்சி....
உத்தர பிரதேஷ் சீதாப்பூரைச் சேர்ந்த ஜெயித் என்ற பள்ளி மாணவனின் பழுதடைந்த சைக்கிளில் பள்ளிக்குச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரது இதயங்களைத் தொட்டுள்ளது.
கல்வி மீது உள்ள உறுதி எதையும் கடந்து செல்ல வைக்கும் என்பதற்கு, உத்தர பிரதேஷ் மாநிலத்தின் சீதாப்பூரைச் சேர்ந்த சிறுவன் ஜெயித் ஒரு உயிர் சாட்சியாக உள்ளான். மிகவும் பழுதடைந்த சைக்கிளில் தினமும் பள்ளிக்கு செல்வது சமூக வலைதளங்களில் மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.
சமூக வலைதளத்தில் வைரலான வீடியோ
சீதாப்பூரின் துர்கா முதன்மைப் பள்ளியில் படிக்கும் ஜெயித், இருக்கை, பிரேக், கைப்பிடி எதுவும் இல்லாத சைக்கிளில் பள்ளிக்கு செல்வது பதிவாகியுள்ளது. 53 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவை ஒரு ஆசிரியர் பதிவு செய்துள்ளார். செப்டம்பர் 25 அன்று @drshareen00 என்ற பயனர் X-ல் பகிர்ந்த அந்த வீடியோ தற்போது 1.15 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளையும், 5000-க்கும் மேற்பட்ட பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
மக்களின் பாராட்டும் உதவி முயற்சியும்
வீடியோவில் ஜெயித்தின் உறுதியும் தன்னம்பிக்கையும் வெளிப்படையாக தெரிகிறது. அவன் சைக்கிளை நிறுத்துவதற்கே கால்களைப் பயன்படுத்துகிறார். இந்த காட்சிகள் பலரது இதயங்களைத் தொட்டதால், பலரும் உதவிக்கரம் நீட்ட முன்வந்தனர். குறிப்பாக, சிலர் அவனுக்கு புதிய சைக்கிள் வாங்கித் தர விருப்பம் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தண்ணீரில் நின்ற சிங்கக்குட்டியை சுற்றி வளைத்த முதலைகள்! பரிதவித்து நின்ற அம்மா! நொடியில் வந்து காப்பாற்றிய கழுகு! 12 விநாடி வீடியோ.....
புதிய சைக்கிளும் மக்களின் செய்தியும்
@drshareen00 தனது பதிவில், ஜெயித்துக்கு புதிய சைக்கிள் வழங்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும், இன்னும் உதவ விரும்புவோருக்கு முகவரி வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார். பலரும் கருத்துகளில், "வாழ்க்கையில் உண்மையான உறுதியும், மனவலிமையும் இருந்தால் பெரிய வெற்றிகளை அடையலாம்" என பாராட்டினர்.
சமூக வலைதளங்களில் வைரலான இந்த மாணவன் வீடியோ சிறுவர்களின் கல்வி மீதான உறுதியையும், மக்களின் உதவி மனப்பான்மையையும் வெளிப்படுத்தி ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: மரண பயம்! என்ன விட்டுருங்க... கத்தியை தீட்டிய உரிமையாளர்! அமைதியாக பார்த்த வாத்து! நாய் பயந்து நடுங்கி கூண்டுக்குள்.....சிரிப்பூட்டும் வீடியோ!