பொதுஇடத்தில் பயங்கர கோபமடைந்து சகோதரை திட்டிய ரோகித் சர்மா..! சமூகவலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ....
ரோகித் சர்மா சகோதரரை கடிந்துகொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகிறது.

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்துவரும் ரோகித் சர்மா, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவால் மீடியா கவனத்தை ஈர்த்துள்ளார். அந்த வீடியோவில், தனது சகோதரர் விஷாலை கடிந்துகொண்டு பேசும் ரோகித் சர்மா காட்சியளிக்கிறார்.
முக்கிய நிகழ்வொன்று கடந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில், மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் புதிதாக நான்கு ஸ்டாண்டுகள் உருவாக்கப்பட்டன. இந்த ஸ்டாண்டுகளுக்கு ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் அஜித் வாடேகர், பிசிசிஐ முன்னாள் தலைவர் சரத் பவார் மற்றும் மும்பை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவர் அமோல் காலே ஆகியோரின் பெயர்கள் சூட்டப்பட்டன.
இந்தத் திறப்பு விழாவில் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், சரத் பவார், ரோகித் சர்மா, அவரது மனைவி, பெற்றோர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
விழா முடிந்தபின், ரோகித் சர்மா மற்றும் அவரது குடும்பம் நிகழ்விடத்தை விட்டு கிளம்பியபோது, அவர் செல்லவிருந்த கார் சேதமடைந்திருப்பதை கவனித்தார். காரில் ஏதோ விபத்து நடந்திருக்கலாம் என சந்தேகித்த ரோகித், உடனே தனது சகோதரர் விஷாலை கடிந்துகொண்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
பலரும் இந்த வீடியோக்கு “அவர்கள் சகோதரர்கள் என்பதால் இது சாதாரணமானதுதான்”, “ரோகித் தனது காரை எவ்வளவு நேசிக்கிறார் என்பது தெரிகிறது” எனப் பலவிதமாக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.