நடுக்கடலில் திடீரென உருவான 100 அடி ராட்சத அலை! கப்பலையே கவிழ்க்கும் பயங்கரம்....திகில் காட்சி!
நடுக்கடலில் திடீரென மலைபோல் எழுந்த ரோக் வேவ் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி கடற்பயணத்தின் பேராபத்தை வெளிச்சமிட்டுள்ளது.
இயற்கையின் கோர முகத்தை நினைவூட்டும் வகையில், தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு காணொளி பார்ப்பவர்களை மிரள வைத்துள்ளது. நடுக்கடலில் திடீரென நீர்ப்பரப்பு மலைபோல் மேலெழுந்து, கண நேரத்தில் ராட்சத அலையாக உடையும் காட்சி, கடலின் கட்டுக்கடங்காத வலிமையை உணர்த்துகிறது.
ரோக் வேவ் என்றால் என்ன?
இந்த அரிய மற்றும் ஆபத்தான நிகழ்வை ரோக் வேவ் (Rogue Wave) என்று அழைக்கிறார்கள். கடல் நீரோட்டங்களின் திடீர் மோதல் அல்லது கடுமையான காற்றழுத்த மாற்றங்கள் காரணமாக உருவாகும் இவ்வகை அலைகள், சாதாரண அலையைவிட பல மடங்கு உயரத்தில் எழுந்து சுமார் 100 அடி அல்லது அதற்கு மேல் உயரத்தை எட்டும்.
கப்பல்களுக்கும் மனித உயிர்களுக்கும் பேராபத்து
இவ்வளவு உயரம் கொண்ட அலைகள், அந்த வழியாகச் செல்லும் பெரிய கப்பல்களையே நிலைகுலையச் செய்யும் சக்தி கொண்டவை. அதனால் தான், உலகின் கொந்தளிப்பான கடல் பகுதிகளில், குறிப்பாக வட அட்லாண்டிக் போன்ற இடங்களில், கடற்பயணம் மிகுந்த எச்சரிக்கையுடன் மேற்கொள்ளப்படுகிறது.
இதையும் படிங்க: அடிஆத்தீ....வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த பெண்! நொடிப்பொழுத்தில் வந்த சூறாவளி பெண்ணை ஆகாயத்தில் சுருட்டி கொண்டு.... அதிர்ச்சி வீடியோ!
சமூக வலைதளங்களில் குவியும் அச்சம்
இந்தக் காணொளியை பார்த்த பலரும், “கடல் இவ்வளவு பயங்கரமானதா?” என்று அதிர்ச்சியில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். விமானப் பயணம் இதைவிட பாதுகாப்பானது என்றும், இந்தக் காட்சியை பார்த்தாலே மரண பயம் ஏற்படுவதாகவும் சமூக வலைதளங்களில் விவாதம் சூடுபிடித்துள்ளது.
ஒரு சில விநாடிகளில் நிகழும் இந்த ராட்சத அலை காட்சி, மனிதன் எவ்வளவு தொழில்நுட்பமாக முன்னேறினாலும், இயற்கையின் முன் அவன் இன்னும் சிறியவனே என்பதைக் கடுமையாக நினைவூட்டுகிறது.