ஐயோ... என்ன இதெல்லாம்... PG பெண்கள் அறையை வீடியோ வெளியிட்டு உண்மையை உடைத்த வாலிபர்! ஷாக் வீடியோ....!!!
PG அறைகளில் பெண்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதை காட்டும் வைரல் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
பணி மற்றும் படிப்புக்காக சொந்த ஊரை விட்டு வெளியூர்களில் தங்கும் இளைஞர்களுக்கு PG மற்றும் ஷேரிங் அறைகள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டன. பொதுவாக ஆண்களின் அறைகள்தான் சுத்தமின்றி இருக்கும் என்ற கருத்து நிலவி வரும் நிலையில், அதற்கு மாறாக பெண்கள் தங்கும் PG அறையின் நிலையை காட்டும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வெளியில் நேர்த்தியாகவும் சுத்தமாகவும் இருப்பவர்கள், தங்களது அறைக்குள் எப்படி இருக்கிறார்கள் என்பதை காட்டும் வகையில் அந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அறைக்குள் துணிகள் ஆங்காங்கே கிடப்பது, சாப்பிட்ட தட்டுகள் கழுவப்படாமல் இருப்பது, பல்வேறு பொருட்கள் சிதறிக் கிடப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதையும் படிங்க: ஒரு பக்கம் சந்தோஷபட்றதா இல்ல இன்னொரு பக்கம் கவலைபட்றதா? சிறுமியின் மௌனத்தை பார்த்து சிந்திக்க வைக்கும் காட்சி!!!
PG அறையின் நிலையை காட்டிய வைரல் வீடியோ
அறையின் மூலை முடுக்குகளிலும் குப்பைகள் சேர்ந்து கிடப்பது போன்ற காட்சிகளும் வீடியோவில் பதிவாகியுள்ளன. இதை பார்த்த பலரும், பெண்கள் அறைகள் பொதுவாக சுத்தமாக இருக்கும் என்ற எண்ணத்துக்கு மாறான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் PG அறைகள் தொடர்பான இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
பெண்கள் குறித்து இருவேறு கருத்துகள்
வீடியோவை ஆதரிக்கும் சிலர், ஆண்களின் அறைகளை மட்டுமே விமர்சிக்கும் நிலையில் பெண்களின் அறைகளிலும் இதுபோன்ற நிலை இருப்பதை வெளிக்கொண்டு வந்திருப்பதாக கூறுகின்றனர். அதே நேரத்தில், ஒரு சிலரின் பழக்கத்தை வைத்து அனைத்து பெண்களையும் பொதுப்படுத்தக் கூடாது என்றும் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் பல்லாயிரக்கணக்கான பார்வைகளை பெற்றுள்ள இந்த வீடியோ, அறை சுத்தம், தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை முறை குறித்து விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. Viral Video குறித்து ஆதரவும் எதிர்ப்பும் என தொடர்ந்து கருத்துகள் பதிவாகி வருகின்றன.