×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இந்த ஒரு ஆடியோவுக்கு ஈடு இணை ஏதும் இல்லை! லட்சக்கணக்கானோரை அழவைத்த வைரல் வீடியோ..!!!!

வீட்டை விட்டு தூரத்தில் தங்கி படிக்கும் மகளுக்கு அம்மா அனுப்பிய உருக்கமான வாய்ஸ் நோட் சமூக வலைதளங்களில் வைரலாகி பலரையும் நெகிழ வைத்துள்ளது.

Advertisement

வீட்டை விட்டு தூரமாக இருந்து படிப்பு மற்றும் வேலை பார்த்து வரும் இளைஞர்களை நெகிழவைத்த ஒரு அம்மாவின் வாய்ஸ் நோட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஷாலினி என்ற இளம்பெண்ணுக்கு அவரது அம்மா அனுப்பிய அந்த ஆடியோவை கேட்ட பலரும் உணர்ச்சிபூர்வமான கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

ஹாஸ்டலில் தனியாக தங்கி வந்த ஷாலினி, வேலை மற்றும் படிப்புச் சுமையால் இரவு நேரத்தில் தனது மொபைலை சைலண்டில் வைத்து தூங்கியதாக கூறப்படுகிறது. மறுநாள் காலை எழுந்தபோது, அம்மா அனுப்பியிருந்த உருக்கமான வாய்ஸ் மெசேஜ் ஒன்றை அவர் பார்த்துள்ளார்.

“எதையும் மனதில் வைத்துக்கொள்ளாதே”

அந்த ஆடியோவில், “மொபைலை எப்போதும் சைலண்டில் வைக்காதே. உன் நினைவு அடிக்கடி வருகிறது. எதற்கும் டென்ஷன் ஆகாமல் நன்றாகப் படி. மனதில் எதையும் போட்டுப் பூட்டி வைக்காதே. வாழ்க்கை கடினமாகத் தோன்றினால் நண்பர்களிடம் பேசு” என்று அந்தத் தாய் பாசமாக அறிவுரை கூறியுள்ளார்.

இதையும் படிங்க: இது பயணமா இல்ல பேய் பட காட்சியா! ரயிலில் நள்ளிரவு 2 மணிக்கு ஒட்டுமொத்த கோச்சிலும் ஒரே பெண்...! இந்திய ரயில்வேயில் இப்படி நடக்குமா? வைரலாகும் விசித்தி வீடியோ..!!!

அதோடு, “நான் எப்போதும் உன்னுடன் இருக்கிறேன். உடம்பைப் பார்த்துக்கொள். நேரத்திற்கு சாப்பிடு. எந்த பெரிய பிரச்சினை வந்தாலும் முதலில் அம்மா, அப்பாவுக்கு கால் செய். ஐ லவ் யூ” என்றும் கூறியிருந்தார். இந்த வாய்ஸ் நோட் பலரின் மனதையும் உருக்கியுள்ளது.

இன்ஸ்டாகிராமில் வைரலான பதிவு

இந்த ஆடியோவை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கமான @slayaniiii-ல் பகிர்ந்துள்ளார். அதன்பின் அந்த பதிவு வேகமாகப் பரவி ஆயிரக்கணக்கான பார்வைகளை பெற்றுள்ளது.

“இந்த ஆடியோவை கேட்டதும் அம்மா நேரில் வந்து கட்டிப்பிடித்த மாதிரி இருந்தது”, “அம்மா பாசம்க்கு உலகத்தில் ஈடு இல்லை” போன்ற கருத்துகளை பலரும் பதிவிட்டு வருகின்றனர். வீட்டை விட்டு வெளியே தங்கி வாழும் இளைஞர்களிடம் இந்த பதிவு அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இளைஞர்களை நெகிழ வைத்த ஆடியோ

குறிப்பாக படிப்பு மற்றும் வேலை காரணமாக பெற்றோரிடமிருந்து தூரமாக இருக்கும் பலரும், இந்த ஆடியோ தங்களது வாழ்க்கையை நினைவுபடுத்தியதாக கூறியுள்ளனர். சில நொடிகள் மட்டுமே நீளமான அந்த வாய்ஸ் நோட், சமூக வலைதளங்களில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

 

இதையும் படிங்க: விருந்தினர் சாப்பிடலனா.... நீங்க சாப்பிட வேண்டியது தானே! என் தலையில் ஏன் கட்டுறீங்க! ப்ளீஸ்... அந்த ஐஸ் கிரீம்மை மட்டும் சாப்பிடுங்க! கடைக்காரர் பேசிய நகைச்சுவை வீடியோ!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Mother Voice Note #வாய்ஸ் நோட் #Instagram viral #அம்மா பாசம் #Shalini
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story