அமானுஷ்யமா! பிணவறையில் அசைந்த சடலத்தின் கால்கள்! ஊழியர் கண்களை நம்பவில்லை! சிசிடிவி கேமராவில் பதிவான திக் திக் காட்சி..!!!
பிணவறை சிசிடிவியில் பதிவு செய்யப்பட்ட பெண் ஊழியர் அருகே இருந்த சடலத்தின் கால்கள் அசைந்ததாக வெளியாகிய வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இறப்பு மற்றும் பயம் ஒன்றாக கலந்திடும் பிணவறைகளில் வேலை செய்வது எளிதல்ல. அங்குள்ள ஊழியர்களின் மனதை உலுக்கும் சம்பவங்கள் பெரும்பாலும் வெளிச்சத்துக்கு வராதபோதும், சமீபத்தில் வெளியான ஒரு வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சடலத்தின் கால்கள் அசைந்த காட்சி
ஒரு பிணவறையில் பணிபுரியும் பெண் ஊழியர், பாதி குளிர்சாதனப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த சடலத்தின் அருகே நின்று குறிப்புகள் எடுத்து கொண்டிருந்தார். திடீரென, அந்தச் சடலத்தின் கால்கள் அசைந்தது போல காட்சி பதிவானது.
இதையும் படிங்க: இப்படி கூட நடக்குமா! உயிரோடு உள்ள பாம்பை முழுசாக விழுங்கிய மற்றொரு பாம்பு! திகில் வீடியோ காட்சி....
முதலில் அது கண்களின் மாயை என்றே ஊழியர் நினைத்தாலும், அந்த காட்சி சிசிடிவியில் தெளிவாக பதிவாகியுள்ளது. பின்னர் இது சமூக வலைதளங்களில் 15 விநாடி வீடியோவாக பரவி பெரும் விவாதத்தை கிளப்பியது.
அமானுஷ்யமா? விஞ்ஞானமா?
வீடியோ வெளியாகியவுடன் பலர் இதை அமானுஷ்ய சம்பவம் என கூறினர். ஆனால், சில நிபுணர்கள் மனிதன் இறந்த சில மணி நேரங்களில் உடல் தசைகள் தளர்வதால் கைகள், கால்கள், கண் இமைகள் அசைவது சாதாரணம் என விளக்கமளித்தனர்.
AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதா?
சில உண்மைச் சரிபார்ப்பு தளங்கள் அந்தச் சடலத்தின் காலில் செயற்கையான குறியீடுகள் இருப்பதை கண்டறிந்துள்ளன. இதனால், இந்த வீடியோ AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுகிறது.
எதுவாக இருந்தாலும், இந்த விடியோ பார்ப்பவர்களை சில நொடிகள் உறைய வைக்கும் பயத்தை ஏற்படுத்தி, இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.