அதிவேகமாக ஓடும் ரயில்! சுமார் 50 கிமீ வேகம்! ரயிலில் படிகட்டில் நின்று உயிரை பணயம் வைத்த வாலிபர்! என்ன காரணம்னு பாருங்க.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!
பீகார் முங்கரில் ரயிலில் செல்போனை பறித்த திருடன், படிக்கட்டில் தொங்கியபடியே தப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பாக பரவி வருகிறது.
பீகார் மாநிலம் முங்கர் அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 50 கிமீ வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்த ரயிலில், ஒரு பயணியிடம் இருந்த செல்போனை பறித்த திருடன், அதே ரயிலின் படிக்கட்டில் தொங்கியபடியே தப்பிச் சென்றது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சம்பவத்தின் போது ரயில் ஒரு ஆற்றுப் பாலத்தின் மீது செல்லும் நேரமாக இருந்ததால், திருடன் படிக்கட்டின் கீழ் சிக்கியபடி பயணித்தார். பின்னர், முட்புதர்களால் சூழ்ந்த பகுதியில் குதித்து தப்பியுள்ளார். இந்த விசித்திர செயல் தற்போது வீடியோவாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அந்த ரயிலில் பயணித்த மற்றொரு நபர் இந்த காட்சிகளை வீடியோவில் பதிவு செய்ததால், திருடனின் செயல்முறை தெளிவாக பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ரயிலில் ஏறிய பெண் அடுத்த நொடியே கீழே விழுந்து! கடவுள் உருவத்தில் வந்த சூப்பர் ஹீரோ! வைரலாகும் சிசிடிவி காட்சி....
இந்த சம்பவம், பயணிகள் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது. எனவே, ரயில்வே நிர்வாகம் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக பின்பற்ற வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: Video: பெத்த மகளை வைத்து இப்படி பண்ணலாமா! தனது 7 வயது மகளின் உயிரை பணயம் வைத்து தந்தை செய்த காரியத்தை பாருங்க! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ....