குழந்தை சாக்லேட் கேட்டது ஒரு தப்பா! 4 வயது மகளை கொடூரமாக கொன்ற குடிகார தந்தை! நெஞ்சை உலுக்கும் சம்பவம்..
மகாராஷ்டிரா மாநிலம் லத்தூரில் 4 வயது மகளை சாக்லேட் வாங்க பணம் கேட்டதற்காக கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர் மாவட்டத்தில் உள்ள கிராமப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஒரு போதை காரணமான கொடூர சம்பவம் நடந்துள்ளது. சாக்லேட் வாங்க பணம் கேட்டதற்காக, ஒருவன் தனது சொந்த 4 வயது மகளை கொலை செய்தார் என்பது வியக்க வைக்கும் செய்தியாகும்.
தந்தையின் கொடூர நடவடிக்கை
இந்த கொடூர செயலுக்கு பொறுப்பாளியாக இருப்பவர் பாலாஜி ரத்தோட். இவர் ஒரு மதுபோதைக்கு அடிமை மற்றும் அடிக்கடி குடும்பத்துடன் சண்டை போடும் பழக்கமுடையவர். கடந்த ஞாயிற்றுக்கிழமை, தனது மனைவி வர்ஷாவுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, வர்ஷா தனது பெற்றோரின் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
சிறுமி ஆருஷியின் மரணம்
இந்நிலையில், இவர்களின் மகள் ஆருஷி (4) சாக்லேட் வாங்க பணம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பணம் தர மறுத்ததோடு, சிறுமி அதற்காக வற்புறுத்தியதால், பாலாஜி ஆத்திரமடைந்து, சேலையால் கழுத்தை நெரித்து சிறுமியை கொலை செய்தார்.
இதையும் படிங்க: 6 வயது சிறுமியை கவ்வி சென்ற சிறுத்தை! 18 மணி நேரம் தேடுதலுக்கு பிறகு! அதிர்ச்சி சம்பவம்...
வழக்கு பதிவு மற்றும் கைது
சம்பவம் பற்றி தகவல் அறிந்த மனைவி வர்ஷா, உடனடியாக போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், பாலாஜி ரத்தோட் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் கைதுசெய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
“என் மகளை கொன்ற கணவருக்கு கடும் தண்டனை, மரண தண்டனை வரைக்கும் வழங்கப்பட வேண்டும்” எனக் கூறி, வர்ஷா கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படிங்க: திருமணமான பெண்ணுடன் 19 வயது ஓரினச்சேர்க்கை! பலமுறை தந்தை எதிர்த்தும் கேட்கல! திடீரென சிறுமி ரத்தத்தால் செய்த அதிர்ச்சி சம்பவம்! கதறும் தந்தை...