மனிதன்- சிங்கம் நேருக்கு நேர் சந்தித்து மிரண்ட தருணம்! இறுதியில் நடந்ததை நீங்களே பாருங்க! வயிறுகுலுங்க சிரிக்க வைக்கும் வீடியோ...
குஜராத்தின் ஜுனாகத்தில் மனிதனும் சிங்கமும் நேருக்கு நேர் சந்தித்து பீதியடைந்து ஓடும் காட்சி வைரலாகி, சமூக வலைதளங்களில் சிரிப்பை கிளப்பியுள்ளது.
விலங்குகள் மற்றும் மனிதர்கள் எதிர்பாராத நேரத்தில் சந்திக்கும் சம்பவங்கள் பல்வேறு நேரங்களில் நடக்கும். ஆனால் குஜராத்தின் ஜுனாகத் பகுதியில் நடந்த சமீபத்திய நிகழ்வு, இணையவாசிகளுக்கு சிரிப்பையும் ஆச்சரியத்தையும் ஒரே நேரத்தில் அளித்துள்ளது.
ஒரு சிமெண்ட் தொழிற்சாலை வளாகத்தில், மனிதனும் சிங்கமும் நேருக்கு நேர் சந்தித்து பீதியடைந்து ஓடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ஓய்வுபெற்ற ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா பகிர்ந்த இந்த வீடியோவில், தொழிற்சாலை வளாகத்திலிருந்து ஒரு நபர் சாதாரணமாக நடந்து வருகிறார். அதே சமயம், ஒரு சிங்கம் வேறு திசையிலிருந்து வருகிறது. ஒரு மூலையைச் சுற்றியவுடன், இருவரும் ஒருவரையொருவர் பார்த்ததும் உடனே பயந்துபோய், தங்களது திசையில் வேகமாக ஓடிவிடுகிறார்கள். இதனைப் பற்றி நந்தா எக்ஸ் தளத்தில், 'இது அரிதான தலைகீழ் துரத்தல்' என நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: Video : புலியின் தலை, கால் பாத்ரூமில் உள்ள ஓட்டையில்! உள்ளே போக முயற்சி செய்த புலி! அலறிய பெண்! வைரலாகும் திகில் வீடியோ....
இந்த வீடியோவுக்கு பல்வேறு எதிர்வினைகள் வந்துள்ளன. சிலர் நாய்களின் எச்சரிக்கை குரல்களை புறக்கணிக்கக் கூடாது எனவும், வனவிலங்குகள் காணப்படும் பகுதிகளில் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் கூறினர். மேலும், 'மனிதர்கள் விலங்குகளின் மண்டலத்தில் அதிகமாக நுழைவதால், அவை கூட பயந்து ஓடுகின்றன' என்ற கருத்தும் வலியுறுத்தப்பட்டது.
இதேவேளை, ராஜஸ்தானில் ஒரு பெண் சிறுத்தைக்கு ராக்கி கட்டிய விசித்திரமான சம்பவமும் சமீபத்தில் தலைப்புகளில் இடம்பிடித்தது. இதனால், விலங்குகளுடன் மனிதர்களின் தொடர்பு சில நேரங்களில் சிரிப்பையும் சில நேரங்களில் ஆபத்தையும் ஏற்படுத்தும் என்பதை இந்த சம்பவங்கள் நினைவூட்டுகின்றன.
இதையும் படிங்க: ஐ.. ஜாலி.. கரண்ட் கம்பியில் குரங்கு என்ன பண்ணுதுன்னு பாருங்க! வைரலாகும் வேடிக்கை வீடியோ..