இரண்டு பைக் சேர்ந்து இழுத்தாலும் இந்த பேண்ட் மட்டும் கிழியவே கிழியாது! ஒன்று ரூ. 399 மட்டுமே! கடைக்காரரின் டெமோ வீடியோ வைரல்...
ஜோத்பூரில் உள்ள கடை, தங்கள் லோயர் உறுதியை வித்தியாசமாகக் காட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி, கோடிக்கணக்கான பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
புதுமையான விளம்பர யுக்திகளால் வாடிக்கையாளர்களை ஈர்ப்பது இன்று பெரும் போட்டியாக உள்ளது. அதில், ஜோத்பூரில் உள்ள ஒரு கடை தனது லோயர் உறுதியை வித்தியாசமான முறையில் காட்டி, இணையத்தில் வைரலாகியுள்ளது.
மோட்டார் பைக்குகள் இடையே கட்டப்பட்ட லோயர்
சாம்சன் என்ற அந்தக் கடை, இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பதிவிட்டது. அதில், ஒரு லோயரை இரண்டு மோட்டார் பைக்குகளுக்கு இடையே கட்டி, பைக்குகளை வேகமாக இழுத்தும் போது கூட லோயர் கிழியாமல் தாங்கியது. இதை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
வாடிக்கையாளர்களுக்கான புதிய முயற்சி
பொதுவாக கடைகள் துணி தரம் மற்றும் வடிவமைப்பை மட்டும் முன்வைத்து விற்பனை செய்வது வழக்கம். ஆனால் சாம்சன் கடை, தங்கள் கிழியாத லோயரை நேரடியாக சோதனை செய்து காட்டியது. வீடியோவில், இந்த லோயர் S முதல் XXL வரை பல அளவுகளில் மற்றும் நிறங்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: எதிர்நீச்சல் சீரியல் நடிகை கனிகாவிற்கு இவ்வளவு பெரிய மகனா! வைரலாகும் வீடியோ...
இணையத்தில் வைரலான வீடியோ
“எப்போதும் கிழியாத லோயர்” என்ற தலைப்புடன் வெளியான இந்த வீடியோ, வெளியான சில மணிநேரங்களில் கோடிக்கணக்கான பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. தற்போது 1.7 கோடிக்கும் மேல் பார்வையாளர்களை எட்டியுள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் பகிர்ந்து வருகின்றனர்.
பயனர்களின் நகைச்சுவையான கருத்துகள்
இந்த வீடியோக்கு பலரும் நகைச்சுவையான கருத்துகளை பகிர்ந்துள்ளனர். ஒருவர், “இது அம்புஜா சிமென்ட்டால் செய்யப்பட்டதா?” என்று கேட்டார். மற்றொருவர், “103 வருடங்களுக்கு முன் வாங்கினேன், இன்னும் கிழியவில்லை” என கிண்டல் செய்தார். மேலும், “இதை வாங்கினால் தலைமுறை தலைமுறையாக உபயோகிக்கலாம்” என சிரிப்பூட்டும் கருத்துகளும் எழுந்தன.
சாதாரணமாக துணி விளம்பரங்கள் வாடிக்கையாளர்களை அதிகம் கவராது. ஆனால், சாம்சன் கடையின் இந்த யுக்தி சமூக வலைதளங்களில் பெரிய வரவேற்பைப் பெற்று, சிறந்த விளம்பர முயற்சியாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: என்னையாடா தள்ளி விட்ட? சண்டைக்கு வாடா நீயா நானானு பாப்போம்! இளைஞருடன் மல்லுகட்டி சண்டை போட்ட ரோபோவின் வீடியோ....