கடி கடி... நல்லா கடி! பாம்பை கடிக்க விட்டு வேடிக்கை பார்த்த நபர்! அதுல விளக்கம் வேற... பகீர் வீடியோ!
இன்ஸ்டாகிராமில் வைரலான வீடியோவில் கிரீன் வைன் ஸ்னேக் பாம்பு மணிக்கட்டை கடிக்கும் போதும் நபர் அமைதியாக பேசுவது பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பாம்பைப் பார்த்தாலே பலர் பயந்து ஒதுங்குவார்கள். ஆனால் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகும் ஒரு வீடியோ, அந்த பொதுவான பயத்தை சவால் விடும் வகையில் வெளியாகி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
வைரலாகும் துணிச்சலான காட்சி
இன்ஸ்டாகிராமில் பரவி வரும் அந்த வீடியோவில், பாம்பு பிடிக்கும் நபர் ஒருவர் ‘பச்சைப்பாம்பு’ என அழைக்கப்படும் கிரீன் வைன் ஸ்னேக்கை தன் மணிக்கட்டை ஆழமாகக் கடிக்க விடுகிறார். பாம்பின் பற்கள் சதையினுள் இறங்கிய நிலையிலும், அந்த நபர் வலி எதுவும் இல்லாதது போல கேமராவிடம் சாதாரணமாக பேசுவது பார்ப்பவர்களை உறைய வைக்கிறது. இந்த காட்சி வைரல் வீடியோவாக மாறியுள்ளது.
மெல்லும் கடித்தல் விளக்கம்
வீடியோவில் அவர் பேசும்போது, “இது ஒரு வகையான மெல்லும் கடித்தல் (Chewing bite). விஷம் உடலுக்குள் செல்லும் வரை இந்த பாம்பு பிடியை விடாது” என விளக்குகிறார். இதன் மூலம் பாம்பின் நடத்தை குறித்து அறிவுப்பூர்வமான தகவல்களையும் பகிர்கிறார்.
இதையும் படிங்க: வாயில் மீனை கௌவ்வி கொண்டு நீரில் நீந்திச்செல்லும் பாம்பு! வைரலாகும் காணொளி....
விஷத்தன்மை குறித்த தகவல்
மேலும், இந்த வகை கிரீன் வைன் ஸ்னேக் பெரிதளவில் விஷம் கொண்டது அல்ல என்றும், அதிகபட்சம் லேசான வீக்கம் அல்லது வலி மட்டுமே ஏற்படலாம் என்றும் கூறுகிறார். இருப்பினும், இதுபோன்ற முயற்சிகள் அனைவருக்கும் பாதுகாப்பானவை அல்ல என்பதும் வலியுறுத்தப்படுகிறது.
சுமார் 1.5 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் இந்த காட்சியை பார்த்துள்ள நிலையில், “இதையெல்லாம் முயற்சி செய்ய யாருக்காவது தைரியம் இருக்கா?” என்று நெட்டிசன்கள் சவால் விடுகின்றனர். இந்த சம்பவம் பாம்பு கடி குறித்த விழிப்புணர்வையும், அதே நேரத்தில் தேவையற்ற சாகசங்கள் ஆபத்தானவை என்பதையும் நினைவூட்டுகிறது; இயற்கையை மரியாதையுடன் அணுகுவது தான் துணிச்சல் என வன உயிரியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: வெடி வெடிக்குறதுல விஞ்ஞான சோதனை! வாட்டர் பாட்டில் வெடி வெடிக்குறத பாருங்க..... வைரலாகும் வீடியோ!