வீட்டின் ஹாலில் தோரணம் போல் சிவப்பு பெராரி காரை தொங்கவிட்ட தொழிலதிபர்! எப்படி இருக்குன்னு நீங்களே வீடியோவில் பாருங்க..
வீட்டின் ஹாலில் தோரணம் போல் சிவப்பு பெராரி காரை தொங்கவிட்ட தொழிலதிபர்! எப்படி இருக்குன்னு நீங்களே வீடியோவில் பாருங்க!
துபாயை சேர்ந்த பிரபல டிஜிட்டல் கான்டென்ட் கிரியேட்டரான @movlogs, தனது வீட்டில் "புதிய அலங்காரம்" என்ற தலைப்பில் வெளியிட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில், சிவப்பு Ferrari போலி கார் ஒன்று வீட்டின் ஹாலில் சரவிளக்காக தொங்கவிடப்பட்டிருப்பது காணப்படுகிறது. இது @edrive.jetcar உடன் இணைந்து உருவாக்கப்பட்டதாகும்.
இந்த Ferrari போலியைக் கூரையில் தொங்கவிடும் வகையில் அமைத்து, லைட் அலங்காரமாக மாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அதனைப் பார்த்த நெட்டிசன்கள், “இது உண்மையா? போலியா?” என சந்தேகத்தில் விழுந்தனர். சிலர், “இது ஒரு engine இல்லாத dummy car தான், கதவுகளும் இல்ல, முழுக்க ஒரு துண்டு மாதிரி தான்” என விமர்சனங்கள் எழுப்பியுள்ளனர்.
மேலும், Ferrari விலை அரை மில்லியன் டாலர் என சொல்லப்பட்ட நிலையில், மற்றொரு பகுதி, “இது $50,000 மாடல் body kit மாதிரி தான்” என தெரிவித்தனர். அதேவேளை, “கார் இல்லாட்டி சரவிளக்கு போடுறது புதுசு... பூகம்பம் வந்தா மேல இருந்து விழும்!” என சிலர் நகைச்சுவையாக விமர்சித்துள்ளனர். மற்றொருவர், “அந்த காரை கம்பளி போட்டு தொங்கவைத்திருப்பது பார்ப்பதற்கு அழகு” என புகழ்ந்திருக்கின்றனர்.
இதன் மூலம், இந்த Ferrari போலி வீடியோ துபாயின் ஆடம்பர வாழ்க்கை மீதான விவாதங்களை மீண்டும் தூண்டியுள்ளது. Ferrari உண்மையானதா, அல்லது மேடை அலங்கார மாடலா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால், வீடியோவின் கலைபூர்வம் மற்றும் அதிர்ச்சி தன்மை நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இதையும் படிங்க: Video: பைக்கை சுற்றி வளைத்த ராட்சத பாம்பு! இறுதியில் பாம்பு என்ன பண்ணுதுன்னு பாருங்க! வைரலாகும் வீடியோ!