யானைகள் காதலித்து முத்தமிடம் அரிய காட்சி! அதுவும் லிப் டு லிப் ஹிஸ்....வேற லெவல் காதல் காட்சி! வைரல் வீடியோ....
இரண்டு யானைகள் ஒன்றுக்கொன்று முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி, பார்வையாளர்களின் மனதை கவர்கிறது.
மனிதர்கள் மட்டுமல்ல, விலங்குகளுக்கும் உணர்வுகள் மற்றும் பாசம் இருக்கும் என்பதற்கு அழகான சான்றாக இந்த காட்சி உள்ளது. இரண்டு யானைகள் ஒன்றுக்கொன்று அன்பை வெளிப்படுத்தும் இந்த தருணம், இணையத்தில் பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்துள்ளது.
முத்தம் பரிமாறும் யானைகள்
காட்டு விலங்குகளில் மிகப்பெரியவையாக இருக்கும் யானைகள், பெரும்பாலும் மனிதர்களுக்கு பொழுதுபோக்காகவே திகழ்கின்றன. ஆனால் சில சமயம் அவை ஆத்திரமடைந்தால் அபாயகரமாகவும் மாறுகின்றன. இந்நிலையில், உடன் பிறந்த இரண்டு யானைகள் ஒன்றுக்கொன்று முத்தமிட்டு காதலை பரிமாறிக்கொள்வது, மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உள்ள பாசத்தை நினைவூட்டுகிறது.
சமூக வலைதளங்களில் வைரல்
இந்த அரிய காட்சியை வனத்துறை அதிகாரி ஒருவர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். குறித்த வீடியோ, நெட்டிசன்களிடம் விரைவாக பரவி, பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பலர், விலங்குகளின் இயல்பான அன்பை ரசித்து, மனம் நிறைந்த பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தாயுடன் தண்ணீரில் அட்டகாசம் செய்த குட்டி யானை! வைரல் வீடியோ...
விலங்குகளுக்கும் அன்பு, பாசம், பரிவு போன்ற உணர்வுகள் உள்ளன என்பதை உறுதியாக உணர்த்தும் இந்த வீடியோ, இயற்கையின் அழகை மனிதர்களுக்கு மீண்டும் நினைவூட்டுகிறது.
இதையும் படிங்க: ராட்சத பாம்பு மனிதரைப் போல மரம் ஏறும் அரிய காட்சி! இணையத்தில் வைரல்...