மானை முழுங்க முயன்ற முதலை! இறுதியில் நடந்த ட்விஸ்ட்.... கடைசியில் முதலைக்கு நேர்ந்த கதியைப் பாருங்க! வைரல் வீடியோ..!!!
மான் என நினைத்து பொம்மையை வேட்டையாட முயன்ற முதலை திகைத்து நின்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பயனர்களை சிரிக்க வைத்த காட்சி.
சமூக வலைதளங்களில் தினந்தோறும் பல்வேறு வித்தியாசமான வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், தற்போது ஒரு வைரல் வீடியோ நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வீடியோவில், முதலை ஒன்றை ஏமாற்றும் வகையில் செய்யப்பட்ட பிராங்க் காட்சி பார்ப்பவர்களை சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது.
மான் என நினைத்து வேட்டை
அந்த வீடியோவில், கரையோரத்தில் மான் மேய்ந்து கொண்டிருப்பது போல் ஒரு பொம்மை வைக்கப்பட்டுள்ளது. அதை உண்மையான விலங்கு என நம்பிய முதலை, மெதுவாக அருகே வந்து வேட்டையாட முயற்சிக்கிறது. இயற்கைச் சூழலில் நடக்கும் உண்மை வேட்டையைப் போலவே அந்த காட்சி தெரிகிறது.
மின்னல் வேக தாக்குதல்
அருகே வந்தவுடன், முதலை மின்னல் வேகத்தில் அந்த "மான்" மீது பாய்ந்து கடிக்கிறது. ஆனால், கடித்த பிறகே அது உண்மையான விலங்கு அல்ல, ஒரு பொம்மை பிராங்க் என்று தெரிய வருகிறது. அதன் வாயில் சிக்கியது வெறும் காகிதமும் பிளாஸ்டிக்கும் தான் என்பதைக் கண்டதும், முதலை குழப்பத்தில் நின்று விடுகிறது.
இதையும் படிங்க: கல்யாண பெண் மேக்கப்பை கலைத்ததும் தெரிந்த உண்மை! அய்யோ பாவம்... பையன் நிலைமை அப்போ... வைரலாகும் வீடியோ!
நெட்டிசன்கள் ரசிப்பு
இந்த காட்சியை பார்த்த நெட்டிசன்கள், "முதலைக்கும் இப்படியொரு ஏமாற்றமா" என்று கமெண்ட்களில் நகைச்சுவையாகப் பதிவிட்டு வருகின்றனர். சிலர் இதை சமூக வலைத்தளங்களில் பரவிய சிறந்த பிராங்க் வீடியோ என்று பாராட்டி வருகின்றனர்.
வனவிலங்குகளின் இயல்பான வேட்டைக் குணத்தை காட்டும் இந்த வீடியோ, அதே நேரத்தில் நகைச்சுவையையும் சேர்த்துள்ளது. இப்படியான பிராங்க் வீடியோக்கள் இணையத்தில் தொடர்ந்து வைரலாகி, பயனர்களுக்கு சிறு நேர மகிழ்ச்சியை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கண்ணிமைக்கும் நொடியில் கடவுளையே மறந்துட்டியேடா தம்பி! நெட்டிசன்களை ரசிக்க வைத்த குட்டி பையனின் கியூட் வீடியோ..!!