×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மிட்டாய் சிக்கிய தம்பியின் உயிரைக் காப்பாற்றிய அண்ணன்! எப்படின்னு பாருங்க! இந்த கருவி வீட்டில் ரொம்ப முக்கியம்! ! வைரலாகும் வீடியோ...

தம்பியின் தொண்டையில் மிட்டாய் சிக்கியபோது, அண்ணன் கருவியைப் பயன்படுத்தி உயிரைக் காப்பாற்றிய வீடியோ, வீட்டு பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

வீட்டிலேயே நிகழ்ந்த ஒரு உயிர் காப்பாற்றும் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்து, வீட்டு பாதுகாப்பின் அவசியத்தை அனைவருக்கும் நினைவூட்டியுள்ளது.

திடீர் ஆபத்தில் சிக்கிய தம்பி

அண்ணனும் தம்பியும் வீட்டில் தனியாக இருந்தபோது, தம்பி விளையாடிக்கொண்டிருந்தான். எதிர்பாராதவிதமாக, அவன் தொண்டையில் மிட்டாய் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு தரையில் விழுந்தான். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அண்ணன், உடனே வயிற்றை அழுத்தி, கால்களை உயர்த்தி பல முயற்சிகள் செய்தாலும் பலனளிக்கவில்லை.

கருவி மூலம் உயிர் காப்பாற்றிய அண்ணன்

நல்ல அதிர்ஷ்டமாக, வீட்டில் தொண்டையில் சிக்கிய பொருளை அகற்றும் சிறப்பு கருவி இருந்தது. அந்த கருவியை திறமையாக பயன்படுத்தி, அண்ணன் தம்பியின் தொண்டையில் சிக்கிய மிட்டாயை வெளியே எடுத்து, அவனது உயிரைக் காப்பாற்றினார்.

இதையும் படிங்க: பண்ணைக்கு சென்ற விவசாயி வீடு திரும்பவில்லை! தேடிய குடும்பத்தினர்! 8 அடி பைதான் பாம்பு வயிறை கீறி விவசாயி உடலை வெளியே எடுத்த மக்கள்! திக் திக் வீடியோ....

வீடியோ வைரல் – விழிப்புணர்வு அதிகரிப்பு

இந்த சம்பவம் வீடியோவாக பதிவாகி, சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதைப் பார்த்த பலரும், இப்படிப்பட்ட கருவி ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டும் என்பதையும், அவசரநிலையில் அவற்றைப் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர்.

இந்த நிகழ்வு, குழந்தைகள் உள்ள வீடுகளில் பாதுகாப்பு உபகரணங்கள் அவசியம் என்பதை மட்டுமல்லாமல், அவற்றை சரியாகப் பயன்படுத்தும் விழிப்புணர்வும்  முக்கியம் என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்துகிறது.

 

இதையும் படிங்க: சிவலிங்கத்தின் மிராக்கிள்.... சிவலிங்கத்தை தானாக சுற்றி வந்த பாம்பு! பக்தர்களின் ஆன்மீக அருள் தரிசனம்! வைரலாகும் பரவச வீடியோ...

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#மிட்டாய் சிக்கியது #Choking Rescue #வீட்டு பாதுகாப்பு #Child Safety Device #viral video
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story