நாளை முதல் Google Pay, Phone Pay பயன்பாட்டில் புதிய கட்டுப்பாடுகள்! இனி ஒரு நாளைக்கு 50 முறை மட்டும்தான்! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க...
ஆகஸ்ட் 1 முதல் யுபிஐ பயன்பாடில் புதிய கட்டுப்பாடுகள் அமல் - கூகுள் பே, போன் பே ஆகியவை மாற்றங்கள் கொண்டு வருகிறது.
நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால், UPI பரிவர்த்தனை முறைகள் தற்போது இந்தியாவில் பெருமளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளன. இன்றைய காலக்கட்டத்தில் பொதுமக்கள் முதல் நிறுவனங்கள் வரை யுபிஐ முறையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
புதிய கட்டுப்பாடுகள் அறிமுகம்
ஆகஸ்ட் 1 முதல், கூகுள் பே மற்றும் போன் பே நிறுவனங்கள் யுபிஐ பாவனையில் புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த உள்ளன. இதன் மூலம், வங்கி இருப்பு சரிபார்ப்பை ஒரு நாளில் 50 முறைகள் மட்டுமே செய்ய முடியும். அதேபோல், மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்குகளை சரிபார்ப்பது 25 முறை என கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ஆட்டோ டெபிட் நேர வரம்பு
தானாகவே பணம் பிடிக்கப்படும் Auto Debit செயல்பாடு குறித்தும் புதிய நேர வரம்புகள் வைக்கப்பட்டுள்ளன. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 9:30 மணி வரை ஆட்டோ டெபிட் அனுமதிக்கப்படாது.
இதையும் படிங்க: பள்ளி மாணவி உயிரிழப்பு! இனி 100 நாட்களுக்கு வாகனங்கள் திருப்பி தரப்படாது! இந்தவகை வாகனங்களுக்கு தீவிர நேர கட்டுப்பாடு! அதிரடி உத்தரவு...
நெட்வொர்க்கில் அழுத்தத்தை தவிர்க்க முயற்சி
மக்கள் அதிக அளவில் யுபிஐ முறையை பயன்படுத்துவதால், அதன் நெட்வொர்க்கில் ஏற்படும் அழுத்தங்களை குறைப்பதற்காகவும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இத்தகைய கட்டுப்பாடுகள் மக்கள் பயன்பாட்டை சீராக்கும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன. புதிய யுபிஐ மாற்றங்களை புரிந்துகொண்டு, பாதுகாப்பாகவும் சீராகவும் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்வது அவசியமாகிறது.
இதையும் படிங்க: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! சரசரவென குறைந்த தங்கம் விலை! 3 நாளில் சவரனுக்கு இவ்வளவு குறைவா! தங்கம் வாங்க சரியான நேரம்...