×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வங்கிக்கணக்கை வாடகைக்கு விடும் விவகாரம்.. தவெக நிர்வாகி கைது.. தொடரும் கிடுக்குபிடி விசாரணை.! 

ஆன்லைன் மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகி கைது செய்யப்பட்டார். தவெக 

Advertisement

தவெக நிர்வாகி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் முக்கிய தகவல் தெரியவந்துள்ளது. 

மோசடி: 

இந்தியா முழுவதும் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட பணத்தை வெளிநாடு வங்கிகளுக்கு மாற்றுவது தொடர்பான விவகாரத்தில், சைபர் குற்றத்தை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மோசடி பணத்தை மாற்றுவதற்கு, கேடி கும்பல் தாங்கள் சிக்கிக்கொள்ளாமல் இருக்க, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலை தேடுவோரை குறிவைத்து புதிய மோசடியையும் அரங்கேற்றி வருகிறது. 

இதையும் படிங்க: விமான ஜன்னல்கள் வட்டமாக இருப்பதற்கு பின்னால் உயிரைக் காக்கும் அறிவியல்.! சுவாரசிய தகவல்.!

எப்படி நடக்கிறது? 

அதாவது, வங்கிக்கணக்கை பணம் மாற்றுவதற்கு தந்தால், கமிஷன் அடிப்படையில் பணம் தரப்படும் என ஒருவரின் வங்கிக்கணக்கை வாங்கிக்கொள்கின்றனர். இந்த வங்கிக்கணக்கில் இருந்து மோசடி பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பி வருகின்றனர். இந்த விஷயம் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் பதிவான வழக்குகளின் அடிப்படையில் சைபர் கிரைம் காவல் துறையினர் ஆய்வு செய்தனர். 

தொடரும் விசாரணை: 

அப்போது, கிராமங்களில் இருக்கும் மக்களின் கணக்குகளை குறிவைத்து மோசடி அரங்கேற்றப்பட்டது தெரியவந்தது. குறிப்பாக தமிழ்நாடு மொத்தமாக மோசடி செயலுக்கு வங்கிக்கணக்கை வாடகைக்கு விட்டதாக 837 பேர் கைது செய்யப்பட்டனர். நெல்லை மாநகர பகுதியில் 3 நாட்களில் 100 க்கும் மேற்பட்டோர் அதிகாரிகளால் விசாரணைக்கு சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  

தவெக நிர்வாகி: 

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஒருவரின் வங்கிக்கணக்கில் ரூ.18 கோடி பணம் வரவு வைக்கப்பட்டது. இதுதொடர்பாக அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, அவர் நெல்லை மத்திய மாவட்ட தவெக நிர்வாகி துணை செயலாளர் மாடசாமி மகன் விக்னேஷ் (வயது 31) என்பது தெரியவந்தது. இவரின் வங்கிக்கணக்கில் கடந்த ஆண்டு நவம்பர் 12 ம் தேதி முதல் 29 வரையில் ஆயிரக்கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. இதனால் அவரின் வங்கிக்கணக்கில் இருந்து பணம் அனுப்பியது / பெறப்பட்ட விபரங்களை அதிகாரிகள் தேடி வருகின்றனர். தவெக நிர்வாகி மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக கைது செய்யப்பட்ட நிலையில், அவரை கட்சியில் இருந்தும் நீக்கி மாவட்ட தவெக நிர்வாகிகள் உத்தரவிட்டுள்ளனர். 

இதையும் படிங்க: மொபைலை அடிக்கடி சார்ஜ் போடுறீங்களா.? இந்த டிப்ஸை ஃபாலோவ் செய்யுங்கள்.! சார்ஜ் இறங்காது.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Technology #TVK #tirunelveli #Cyber crime
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story