×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வாட்ஸ்-ஆப்பில் நீங்கள் அறிந்திராத 5 முக்கிய அம்சங்கள் இதோ உங்களுக்காக!

Top 5 tips to use whatsapp

Advertisement

பேஸ்புக் நிறுவனத்தின் ஒரு அங்கமாக இருக்கும் வாட்ஸ்-ஆப் செயலியின் பயன்பாடு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இதற்கு ஏற்றாற்போல் வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புதிய வசதிகளை வாட்ஸ்-ஆப் நிறுவனம் வெளியிடுகிறது. 

வாட்ஸ்-ஆப்பில் இருக்கும் அனைத்து வசதிகளும் அனைவருக்கும் தெரிவதில்லை. இந்த பதிவில் 5 முக்கிய வசதிகளைப் பற்றி பார்ப்போம். 

1. வாட்ஸ்-ஆப் ஸ்டேட்டஸ் பதிவிறக்கம்:
வாட்ஸ்-ஆப் ஸ்டேடஸில் மற்றவர்கள் வைக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நேரடியாக நமது மொபைலில் பதிவிறக்கம் செய்ய முடியாது. இதற்கென்றே உள்ள மூன்றாம தர செயலியான status downloader மூலம் மற்றவர்களின் ஸ்டேட்டஸை பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். 

2. உங்கள் மெமரியை அதிகமாக பயன்படுத்துவது யார்? 
வாட்ஸ்-ஆப்பில் அனுப்பப்படும் போட்டோ மற்றும் வீடியோக்களால் நமது மொபைல் மெமரி அதிகமாக செலவாகின்றது. இதில் எந்த ஒரு நபரால் அதிகமான மெமரி வீணாகிறது என்பதனை கண்டறிய Settings > Open Data and storage usage > Storage usage மூலம் பார்க்கலாம். 

3. குறைவான மொபைல் டேட்டா:
வாட்ஸ்-ஆப்பில் அனுப்பப்படும் மீடியா பைல்களை தானாகவே பதிவிறக்கம் செய்தால் மொபைல் டேட்டா விரைவில் தீர்ந்துவிடும். இதனை கட்டுப்படுத்த Settings > Data and storage usage > Media auto-download > when using mobile data பிரிவில் No media ஆப்சனை தேர்வு செய்து கொண்டால் தானாகவே எந்த மீடியாவும் பதிவிறக்கம் ஆகாது. நமக்கு தேவையானதை மட்டும் நாம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 

4. வாய்ஸ் மெசேஜை சத்தமில்லாமல் கேட்க:
ஹெட்செட் இல்லாத சமயங்களில் வாய்ஸ் மெசேஜை படிக்க பலரும் பயப்படுவர். காரணம் அது லௌடு ஸ்பீக்கரில் ப்ளே ஆவதால் தான். ஆனால் வாட்ஸ்-ஆப்பில் இதற்கென்றே ஒரு ப்ரத்யேக வசதி உள்ளது. அதாவது வாய்ஸ் மெசேஜின் ப்ளே பட்டனை க்ளிக் செய்தவுடன் மொபைலை எப்போதும் கால் பேசுவது போல காதின் அருகில் வைத்துக்கொண்டால் தானாகவே சத்தம் குறைந்துவிடும். 

5. Text Format:


வாட்ஸ்-ஆப்பில் குறிப்பிட்ட வார்த்தைகளை மட்டும் போல்ட், இட்டாலிக், அடிக்கப்பட்ட எழுத்து ஆகியவற்றை அனுப்பலாம். 
*text* --> பொல்ட்
_text_ --> இட்டாலிக்
~text~ --> strike

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Whatsapp #Whatsapp tips
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story