இரத்த நிலவு சந்திர கிரகணம்! எந்த தேதியில் இந்தியாவில் தெரியும்! எப்படி பார்ப்பது!
செப்டம்பர் 7-8, 2025 இரவில் நிகழவுள்ள முழு சந்திர கிரகணத்தின் போது உருவாகும் இரத்த நிலவு இந்தியாவிலும் காணப்படும். அரிதான வானியல் நிகழ்வு.
வானியல் ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் சந்திர கிரகணம் மற்றும் இரத்த நிலவு நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 7-8, 2025 இரவில் நடக்கவுள்ளது. இந்த அரிய நிகழ்வு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களை ஈர்க்கும்.
சந்திர கிரகணம் என்றால் என்ன?
சூரியன், பூமி, சந்திரன் மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும்போது பூமி, சந்திரனை மறைக்கிறது. இதன் விளைவாக சந்திரன் இருளில் மூழ்கும்போது அதை சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. முழு கிரகணம் நேரத்தில் சந்திரன் சிவப்பு நிறத்தில் பிரகாசிப்பதால் அதனை இரத்த நிலவு என்று குறிப்பிடுகிறார்கள்.
எப்போது, எங்கு தெரியும்?
இந்த ஆண்டு செப்டம்பர் 7-8, 2025 இரவில் முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது. ஆசியா, ஆஸ்திரேலியா, கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் தெளிவாகக் காணலாம். இந்தியாவிலும் மக்கள் இரத்த நிலவை நேரடியாகக் கண்டு ரசிக்க முடியும்.
இதையும் படிங்க: 2025 இல் மக்களை பதற்றத்திற்கு உள்ளாக்கும் அபாயங்கள்! பாபா வங்காவின் கணிப்புக்கள் ஜூலை மாதத்தில் பலித்தன! இன்னும் நடக்க போவது என்னென்ன?
சந்திரன் ஏன் சிவப்பாக மாறுகிறது?
பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வரும்போது சூரிய ஒளியின் குறுகிய நீல அலைநீளம் வளிமண்டலத்தில் சிதறி, நீண்ட சிவப்பு மற்றும் ஆரஞ்சு அலைநீளம் மட்டும் சந்திரனை அடைகிறது. இதனால் சந்திரன் சிவப்பு நிறமாக மாறுகிறது. இந்த அரிய காட்சியை பாதுகாப்பு கண்ணாடிகள் இன்றி நேரடியாகக் கண்களால் பார்க்கலாம்.
இந்தியாவில் இரத்த நிலவு
இந்தியாவில் இரவு நேரத்தில் மக்கள் வானத்தை நோக்கி பார்த்தால் இந்த வியப்பூட்டும் இரத்த நிலவை காண முடியும். இயற்கையின் அதிசய காட்சியை அனுபவிக்க ஆர்வலர்கள் அதிகமாக வெளியில் கூடுவார்கள்.
மனதை கொள்ளை கொள்ளும் இந்த வானியல் நிகழ்ச்சி இயற்கையின் அழகையும் அதிசயத்தையும் நமக்கு நினைவூட்டுகிறது. 2025 செப்டம்பர் மாத இரவில் நிகழவிருக்கும் இந்த இரத்த நிலவு அனைவருக்கும் மறக்கமுடியாத அனுபவமாக அமையும்.
இதையும் படிங்க: ராட்சத பாம்பு மனிதரைப் போல மரம் ஏறும் அரிய காட்சி! இணையத்தில் வைரல்...