தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வெள்ளம் வருவதை முன் கூட்டியே தெரியப்படுத்தும் புது ஆப்! இனி வெள்ள அபாயம் பற்றி கவலைப்பட தேவை இல்லை!

New mobile app for finding flood symptoms

New mobile app for finding flood symptoms Advertisement

மனிதனின் நாகரிகம் எட்ட முடியாத அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது. அதில் ஒன்றுதான் ஸ்மார்ட் போன். ஸ்மார்ட் போன் செயலி மூலம் ஒரு இடத்தில் உள்ள வெட்ப நிலையை அறிய முடியும், அதே போல வெள்ளம் வருவதை முன்கூட்டிய ஸ்மார்ட் போன் செயலி மூலம் அறிய முடியும் என்று ஆராய்ச்சி கூறுகிறது.


சமீபத்தில் இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், நான்கு ஸ்மார்ட்போன்களை கட்டுப்படுத்தப்பட்ட சூழல்களில் வைத்து, அவற்றின் Data-வை கொண்டு சூறாவளி போன்றவற்றை கணிக்க பயன்படுத்தப்பட்டது.

இவை கடலில் ஏற்படும் புயலுக்கு இணையானதாக கூறப்படுகிறது. அத்துடன் Weather signal எனும் செயலியும் இதில் பயன்படுத்தப்பட்டது. வானிலை அறிக்கையை ஸ்மார்ட்போன்கள் மூலம் அறிந்துகொள்வதைப் போல், வானிலை விவரங்களை Cloud செயலி மூலம் தெரிந்துகொள்ள முடியும்.Flood prevention app


இந்த தகவல்களை வைத்து ஆபத்தான பகுதிகளை கண்டறிந்து, அங்குள்ள நபர்களுக்கு முன்கூட்டியே தகவல்களை வழங்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுதொடர்பாக மூத்த ஆராய்ச்சியாளரும், பேராசிரியருமான காலின் பிரைஸ் கூறுகையில், ‘நம் ஸ்மார்ட்போன்களில் உள்ள Censor நம் சுற்றுச்சூழல் மற்றும் ஈர்ப்பு விசை, புவியின் காந்தபுலம், காற்றழுத்தம், வெப்பநிலைகள், ஒலி அளவுகள் மற்றும் பலவற்றை Track செய்து வருகிறது.

உலகம் முழுக்க சுமார் 300 முதல் 400 கோடி ஸ்மார்ட்போன்களில் இந்த தகவல்கள் பரவிக் கிடக்கின்றன. இந்த தகவல்களைக் கொண்டு, வானிலையை மிக துல்லியமாக Track செய்து மற்ற இயற்கை பேரழிவுகளை முன்கூட்டியே கணிக்க முடியும்’ என தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Flood prevention app #Cloud app #Weather app #flood
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story