×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காம இச்சைக்காக குழந்தையை பலிகொடுத்த தாய்.. ஒன்றரை வயது குழந்தை உடலில் 51 காயங்கள்.. தாயும், இரண்டாவது கணவனும்.. கொந்தளிப்பு.!

Nedumangad Child: நெடுமாங்காடு குழந்தை மரணம் தொடர்பான விவகாரத்தில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

கேரளா மாநிலத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள மனதை பதறவைக்கும் சம்பவத்தை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

51 இடங்களில் காயம்:

Nedumangad Child Death Video: கேரளா மாநிலம் நெடுமங்காடு பகுதியில் வசித்து வருபவர் அகிலா. இவரின் இரண்டாவது கணவர் அஸ்கர். அகிலாவுக்கு திருமணம் முடிந்து ஒன்றரை வயதுடைய குழந்தை இருக்கும் நிலையில், அவரது முதல் கணவர் இறந்துவிட்டார். இதனிடையே, சமீபத்தில் இவரின் குழந்தையும் உயிரிழந்த நிலையில், காவல் துறையினர் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது, குழந்தையின் உடலில் 51 இடங்களில் காயமும், குழந்தை கொடும் சித்ரவதையை அனுபவித்து மரணித்ததும் உறுதி செய்யப்பட்டது. மேலும், உள்ளுறுப்புகளில் ரத்த கசிவும் இருந்துள்ளது. இந்த வழக்கில் குழந்தையை கொலை செய்ததாக அகிலா, அவரின் ஆண் தோழர் அஸ்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க: கர்ப்பிணியின் பெண்ணுறுப்பில் 27 செமீ இரும்பு ராடு.. சைக்கோ கணவனால் ராட்சசன் பட பாணியில் நரகவேதனை.. பறிபோன 2 உயிர்.!

தாக்குதல் முயற்சி:

சம்பவத்தன்று குழந்தையை கடுமையாக தாக்கியவர்கள், குழந்தை உணவை சாப்பிட்டு தொண்டையில் சிக்கிக்கொண்டதாக கூறி இருக்கின்றனர். குழந்தையை காப்பாற்ற முயற்சித்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் பலனில்லை. ஆனால், அவர்கள் சந்தேகப்படும் வகையில் குழந்தையின் உடலில் காயம் இருந்துள்ளது. இந்த வழக்கில் அஸ்கர் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்து, தடயங்களை சேகரிக்க அதிகாரிகள் அவரின் வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது, மக்கள் ஒன்று திரண்டு அஷ்கரை தாக்க முற்பட்ட நிலையில், அதிகாரிகள் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

குழந்தை பரிதாப மரணம்:

கடந்த 6 மாதங்களாக அஸ்கர், அகிலா, குழந்தை என மூவரும் சம்பந்தப்பட்ட வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். எப்போதும் குழந்தை அழும் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்துள்ளது. அக்கம் பக்கத்தினர் சோதித்தபோது குழந்தைக்கு உடல்நலம் சரியில்லை என கூறி சமாளித்து இருக்கின்றனர். சமீபத்தில் சிறுவனின் இரண்டு கைகளும் உடைந்த நிலையில், குழந்தை தவறி கீழே விழுந்துவிட்டதாக கூறி இருக்கின்றனர். ஆனால், குழந்தையை இவர்கள் சித்ரவதை செய்தது தற்போது அம்பலமாகி இருக்கிறது. இதுதொடர்பான அதிர்ச்சி வீடியோவும் வெளியாகியுள்ளது.

குற்றவாளியின் முன்னாள் மனைவி பகீர் தகவல்:

அஸ்கருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகியிருக்கும் நிலையில், அவரிமுதல் மனைவி அமினாவும் முன்னாள் கணவர் தன்னை கடுமையாக துன்புறுத்துவார். என்னை சுவற்றில் முட்டவைத்தும், தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்ய முயற்சித்தார் என பகீர் தகவலை பகிர்ந்து இருக்கிறார். இதனால் ஒருசில மாதங்கள் வரை அவர் சுயநினைவின்றி இருந்த நிலையில், தற்போது இதற்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வருகிறார். இந்த சம்பவம் கேரளா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: பச்ச புள்ள உடம்பில் 51 சித்திரவதை காயங்கள்! தாயின் காமவெறிக்கு பலியான ஒன்றரை வயது குழந்தை...... கள்ளக்காதலன் குழந்தைக்கு செய்த கொடூரம்! பகீர் வீடியோ..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #illegal affair #KERALA #Nedumangad Child #நெடுமங்காடு #ஒன்றரை வயது குழந்தை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story