இந்தியாவில் அறிமுகமான iQOO 15 ஸ்மார்ட்போன்.. சிறப்பம்சங்கள் என்ன?.. விலை விபரம் இதோ.!
iQOO 15 ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தபட்டது.
இந்தியாவில் இன்று அறிமுகமான iQOO 15 மொபைல் 7000 mAh திறன் கொண்ட பேட்டரி, 100 வாட்ஸ் திறன் உடைய அதிவேக சார்ஜிங் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.
இந்திய சந்தையில் iQOO ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அந்நிறுவனமும் தனது புதிய படைப்புகளை அடுத்தடுத்து களமிறக்கி வருகிறது. அந்த வகையில் iQOO 15 ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தபட்டது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜெனரல் 5 இணைக்கப்பட்டுள்ளது. 6.85 இன்ச் 2K M14 ஓஎல்இடி டிஸ்ப்ளே, 50MP மெயின் லென்ஸ், 50MP வைடு ஆங்கிள், 50 எம்பி சோனி 3x கேமரா, 32MP செல்பி கேமரா ஆகியவை வழங்கப்படுகிறது.
iQOO 15 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
இதனுடன் 100 வாட்ஸ் திறன் கொண்ட பாஸ்ட் சார்ஜர் 40 வாட்ஸ் ஒயர்லெஸ் சார்ஜிங் போன்றவையும் கொடுக்கப்படுகிறது. 7000 mAh பேட்டரி திறனுடன் ஆண்ட்ராய்டு 16 ஒர்ஜின்OS 6 ஆகியவற்றை இது கொண்டுள்ளது. 7 வருட பாதுகாப்பு போன்ற பல முக்கிய அம்சங்களுடன் களமிறங்கும் iQOO ஸ்மார்ட்போன் 12 ஜிபி, 256 ஜிபி கொண்ட மாடலுக்கு ரூ.72,999 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 16 ஜிபி மற்றும் 512 ஜிபி மாடலுக்கு ரூ.79,999 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வயிற்றுவலியால் துடி துடித்த 13 வயது சிறுவன்! ஸ்கேனில் தெரிந்த 80 முதல் 100... அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்..!!
விற்பனைக்கு அறிமுகம்:
தள்ளுபடி போன்றவை மூலமாக ரூ.5,000 முதல் ரூ.9,000 வரை விலை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் டிசம்பர் 1ஆம் தேதியான இன்று மதியம் 12 மணிக்கு மேல் தொடங்கி அமேசான் இந்தியா மற்றும் iQOO வெப்சைட்டுகளில் இந்த ஸ்மார்ட் போன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது.
அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமாகும் iQOO ஸ்மார்ட்போன்: