×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இனி நீங்களும் வாங்கலாம் ஒரு ஐபோன்! ஐபோன்கள் அதிரடி விலைகுறைப்பு!

Iphone reduced old phone rates

Advertisement

பட்டிதொட்டியெங்கும் அனைவருடைய ஆசையும் எப்படியாவது ஒரு ஐபோன் வாங்கவேண்டும் என்பதுதான். அந்த அளவிற்கு ஐபோனின் மோகம் அனைவரிடத்திலும் பரவியுள்ளது. இதற்கு காரணம் அந்த போனிற்கான மதிப்புதான் காரணம்.


ஆனால் சாதாரண மக்களால் வாங்க முடியாத அளவில் ஐபோனின் விலை அதிகம். இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் 2018 ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்து, ஏற்கனவே விற்பனை செய்யும் ஐபோன்களின் விலையை குறைத்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபோன் மாடல்கள் அறிமுகம் செய்து, நீண்ட நாட்களாக ஐபோன் வாங்க விரும்புவோர் ஆவலுடன் எதிர்பார்த்த தகவலை ஆப்பிள் அறிவித்தது. மூன்று புதிய ஐபோன்கள் அறிமுகம் செய்ததுடன் ஆப்பிள் ஏற்கனவே விற்பனை செய்யும் ஐபோன் X உள்ளிட்ட மால்களின் விலையை குறைப்பதாக அறிவித்தது.

சர்வதேச சந்தை மட்டுமின்றி இந்தியாவிலும் ஐபோன் மாடல்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் ஐபோன் 6எஸ் 32 ஜிபி வேரியன்ட் விலை ரூ.29,900 முதல் துவங்குகிறது. ஐபோன் 6எஸ் பிளஸ் மாடல் ரூ.34,900 முதல் துவங்குகிறது. ஐபோன் மாடல்களின் புதிய விலை ஆப்பிள் இந்தியா வலைத்தளத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஐபோன் எஸ்.இ., ஐபோன் 6எஸ், ஐபோன் 6எஸ் பிளஸ் மற்றும் ஐபோன் X உள்ளிட்ட மாடல்களின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் ஐபோன் எஸ்.இ. விற்பனை மட்டும் நிறுத்தப்பட்டுள்ளது.

புதிய விலையை பொருத்த வரை ஐபோன் X மாடலின் 64 ஜிபி வேரியன்ட் விலை ரூ.91,900 என்றும் 256 ஜிபி வேரியன்ட் விலை ரூ.1,06,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக ஐபோன் X விலை ரூ.95,390 என்றும் ரூ.1,08,930 விலையில் விற்பனை செய்யப்பட்டது.

இத்துடன் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் மாடல்களின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 64 ஜிபி ஐபோன் 8 மாடல் ரூ.59,900 என்றும் 256 ஜிபி வேரியன்ட் ரூ.74,900 என மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக இந்த மாடல்கள் ரூ.67,940 மற்றும் ரூ.81,500 விலையில் விற்பனை செய்யப்பட்டன.

ஐபோன் 8 பிளஸ் 64 ஜிபி வேரியன்ட் விலை ரூ.69,900 என மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக இந்த மாடல் ரூ.77,560 விலையில் விற்பனை செய்யப்பட்டது. இதன் 256 ஜிபி வேரியன்ட் ரூ.91,110 விலையில் இருந்து ரூ.6,210 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.84,900 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன் 2016-ம் ஆண்டு அறிமுகமான ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் மாடல்களும் விலை குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி 32 ஜிபி ஐபோன் 7 விலை ரூ.39,900 என்றும், 128 ஜிபி மாடல் ரூ.49,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே மாடல்கள் முன்னதாக ரூ.52,370 மற்றும் ரூ.61,560 விலையில் விற்பனை செய்யப்பட்டன.

இதேபோன்று ஐபோன் 7 பிளஸ் 32 ஜிபி வேரியன்ட் ரூ.49,900 மற்றும் 128 ஜிபி ரூ.59,900 விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Iphonex #iphone #Iphone rate
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story