×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

போஸ்ட் ஆபிஸ் பெயரில் புது மோசடி.. மக்களே உஷார்.. அதிகாரிகள் எச்சரிக்கை.. இந்த விஷயத்தில் கவனம்.! 

India Post Scam Alert: இந்திய அஞ்சல்துறை பெயரில் மோசடி நடப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

சைபர் மோசடி குற்றம் குறித்து சிபிஐ எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.

மெசேஜ் அனுப்பி மோசடி: 

New India Post Scam: இந்திய அஞ்சல் துறையின் பெயரில் வாட்சப் உட்பட சமூக வலைத்தளங்களில் பரவி வரும் மோசடி தொடர்பாக மத்திய புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சிபிஐ வெளியிட்டுள்ள இதுகுறித்த எச்சரிக்கை பதிவின்படி, சைபர் குற்றவாளிகள் மக்களின் செல்போன் நம்பருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புவது உறுதி செய்யப்பட்டுள்ளது. வாட்ஸப்பிலும் குறுஞ்செய்தி அனுப்புகின்றனர். 

இதையும் படிங்க: Bird Flu: தமிழகத்தில் பறவைக்காய்ச்சல்.. ஆப்-பாயில் சாப்பிடாதீங்க.. தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

போலி பார்சல்: 

அதாவது, உங்களின் முகவரி சரியாக இல்லாத காரணத்தால், பார்சல் டெலிவரி செய்ய முடியவில்லை. அல்லது ரத்து செய்யப்படுகிறது. மீண்டும் டெலிவரி செய்ய உரிய தொகையை ஆன்லைனில் செலுத்த வேண்டும் என லிங்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனை கிளிக் செய்தால் அஞ்சல் துறையின் அதிகாரபூர்வ பக்கம் போல போலி இணையதளத்துக்கு அழைத்துச் செல்லும். 

கிளிக் செய்தால்...

அங்கு நமது வங்கி விபரங்கள், முகவரி போன்றவை அனைத்தும் கேட்கும். கிரெடிட் கார்டு குறித்த தகவலை உள்ளிடும்போது, தகவல்களை திருடும் கும்பல் நமது பணத்தையும் திருடுகிறது. நொடியில் நமது பணம் பறிபோய்விடும். இதனால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. முன்பின் தெரியாத நம்பரில் இருந்து வரும் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. பார்சல் குறித்த தகவலை உறுதி செய்ய www.indiapost.gov.in என்ற பக்கத்துக்குச்செல்ல வேண்டும். ஏடிஎம் விபரங்களை பகிரக்கூடாது. 

சந்தேகம் இருந்தால் சைபர் குற்​றப்​பிரிவு உதவி எண் 1930 க்கு தொடர்பு கொள்ளவும். அல்லது www.cybercrime.gov.in என்ற வெப்சைட்டில் புகார் அளிக்கலாம். 

இதையும் படிங்க: இந்தியர்களை குறிவைத்து மெகா சம்பவம்.. வெளியான ஷாக் தகவல்.! முழுவிபரம்..!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #Technology news #Trending #Scam Alert
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story