போருக்கும் நடுவில் மோடி அரசின் அதிரடி பிளான்! ₹5,000 கோடியில் இறங்கிய ஹெலிகாப்டர்கள் மற்றும்' ஷ்டில்' ஏவுகனைகள்!!!
இந்தியாவின் கடல் மற்றும் வான் பாதுகாப்பை பலப்படுத்த ₹5,083 கோடி மதிப்பில் ஹெலிகாப்டர்கள் மற்றும் 'ஷ்டில்' ஏவுகணை அமைப்புகள் வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
உலகளாவிய பாதுகாப்பு சூழ்நிலை பதற்றமாக இருக்கும் நிலையில், இந்தியா தனது கடல் மற்றும் வான் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ₹5,083 கோடி மதிப்பிலான புதிய பாதுகாப்பு ஒப்பந்தங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
மேம்பட்ட ஹெலிகாப்டர்கள் வாங்கும் திட்டம்
இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்திடமிருந்து சுமார் ₹2,901 கோடி செலவில் ஆறு மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட உள்ளன. இந்த ஹெலிகாப்டர்கள் கடலோரக் காவல் படையின் கண்காணிப்பு, அவசர மீட்பு நடவடிக்கைகள் மற்றும் கடலில் உள்ள மீனவர்களின் பாதுகாப்பு பணிகளில் பயன்படுத்தப்படவுள்ளன.
உள்நாட்டு தொழில்களுக்கு ஊக்கம்
இந்த திட்டம் உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தியை ஊக்குவிக்கும் முக்கிய முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்திய தொழில்துறையில் வளர்ச்சி ஏற்படுவதுடன், சுமார் 65 லட்சம் மணிநேர வேலைவாய்ப்புகள் உருவாகும் என மதிப்பிடப்படுகிறது.
இதையும் படிங்க: மார்னிங் மகிழ்ச்சி செய்தி! நாடு முழுவதும் அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்வு..? வெளியான குட் நியூஷ்!
கடற்படைக்கு 'ஷ்டில்' ஏவுகணை அமைப்பு
இதனுடன், இந்திய கடற்படையின் போர்க்கப்பல்களை வான்வழித் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க ₹2,182 கோடி மதிப்பில் ரஷ்யாவிடம் இருந்து ஷ்டில் ஏவுகணை அமைப்பு வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எந்த வகையான வானிலையிலும் எதிரி விமானங்கள் மற்றும் ட்ரோன்களை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் இந்த ஏவுகணைகளுக்கு உள்ளது.
மொத்தத்தில், இந்த புதிய பாதுகாப்பு ஒப்பந்தங்கள் இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பு திறனை மேலும் உயர்த்தும் முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது. உலகளாவிய பாதுகாப்பு சூழ்நிலையில் எந்த சமரசமும் இல்லாமல் நாட்டின் எல்லைகளை பாதுகாக்க இந்தியா உறுதியுடன் செயல்படுகிறது என்பதையும் இந்த நடவடிக்கை வெளிப்படுத்துகிறது.
இதையும் படிங்க: சற்றுமுன்.... வங்கிக் கணக்கில் வரவாகும் பணம்! ரூ. 2,446 கோடி நிதி ஒதுக்கீடு.... தமிழக அரசு கொடுத்த இன்பச் செய்தி!!!