விபத்து சமயங்களில் உங்கள் போன் லாக் ஆகி இருந்தால் உங்கள் உறவினர்கள் நம்பரை எப்படி ஆண்ட்ராய்டு போனில் காண்பிப்பது?
How to show owner info on android phone

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் போனின் தேவை மிகவும் அதிகமாகிவிட்டது. அதேபோல ஸ்மார்ட் போன் இல்லாமல் யாரும் வெளியில் செல்வது இல்லை. வாறு நீங்கள் வெளியில் செல்லும்போது எதிர்ப்பாராத விதமாக விபத்து ஏற்பட்டாலோ? அல்லது நீங்கள் மயங்கி கீழே விழுந்தாலோ உங்கள் உறவினர்களுக்கு தகவல் சொல்ல வேண்டியது மிகவும் அவசியம்.
அந்த சம்யயங்களில் நீங்கள் உங்கள் போனில் பேட்டர்ன் லாக் செய்து வைத்திருந்தால் உங்களுக்கு உதவி செய்பவர்களால் உங்களது உறவினர்களை தொலைபேசி எங்களை எளிதில் எடுக்க இயலாது.
அது போன்ற சமையத்தில் பேட்டர்ன் லாக் செட்டிங் அமைத்திருந்தாலும் சில வழிகளில் உங்கள் நெருங்கிய உறவினர்களின் மொபைல் எண்ணை உங்களது டிஸ்பிளேவுக்கு கொண்டுவர முடியும். அதன் மூலம் மிக எளிமையாக தகவல் கொடுக்க முடியும் அதற்க்கு சில வழிமுறைகள் உள்ளன, பின்வரும் ஸ்லைடர்களில் அந்த வழிமுறைகளை பார்க்கலாம்.முதலில் உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் செட்டிங் உள்ளே நுழையவேண்டும்.
அதன்பின் லாக் ஸ்கீரின் என்ற அமைப்பை தேர்ந்தேடுத்து உழ்நுழைய வேண்டும்.பின்பு ஸ்கீரின் லாக் அமைப்பை பயன்படுத்தி குறிப்பிட்ட வடிவில் உங்களது பேட்டர்ன் லாக் அமைத்துக்கொள்ளமுடியும்.
அதன்பின்பு கீழே கொடுக்கப்பட்டுள்ள ஓனர் இன்ஃபோ என்ற அமைப்பை தேர்ந்தேடுக்கவும், அதில்உங்களுடைய நெருங்கிய உறவினர்களின் பெயர் மற்றும் மொபைல் எண்களை பதிவு செய்யவேண்டும்.நீங்கள் பதிவு செய்த அந்த பெயர் மற்றும் மொபைல் எண்கள் உங்களுடைய டிஸ்பிளேவுக்கு வரும்.