×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மொபைல் தொலைந்துவிட்டால் தொலைபேசியை லாக் அல்லது தகவல்களை டெலிட் செய்வது எப்படி? இதோ!

How to lock or erase data from lost mobile in Tamil

Advertisement

தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. குறிப்பாக தொலைபேசி இன்று நமது அனைவரின் வாழ்விலும் மிகப்பெரிய அங்கமாக மாறிவிட்டது. இன்று தொலைபேசி இல்லாத நபர்களே இல்லை என்ற அளவுக்கு அனைவரிடத்திலும் தொலைபேசி வந்துவிட்டது. அதிலும் அனைவரும் ஸ்மார்ட் போன்தான் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

நமது முக்கிய தகவல்கள், நெருங்கிய புகைப்படங்கள், அந்தரங்க தகவல்கள் இப்படி ஏகப்பட்ட விஷயங்களை தொலைபேசியில் வைத்திருப்பதும், பின்னர் தொலைபேசி தொலையும் பட்சத்தில் அந்தரங்க விஷயங்கள் வெளியாகி நாம் சிக்கலில் சிக்குவதும் வழக்கமாக நடந்துவருகிறது.

தொலைபேசி தொலைந்துபோனாலும் உங்கள் தொலைபேசியில் இருக்கும் தகவல்களை எளிதில் டேப்லெட் செய்யமுடியும். எப்படினு கேட்குறீங்களா? வாங்க பாக்கலாம்.

Find My Device

Find my device என கூகுளில் தேடவும். அல்லது android.com/find என்ற இணைய முகவரிக்கு சென்று உங்கள் தொலைபேசியில் பயன்படுத்தும் கூகிள் அக்கவுண்ட்டை லாகின் செய்யவும்.

Play Sound, Lock , Erase , Map

நீங்கள் லாகின் செய்ததும் உங்களது  ஸ்க்ரீனின் இடது புறம் நாம் தவறவிட்ட செல்போன் மாடலின் எண் மற்றும் அதற்கு கீழே Play Sound, Lock , Erase என்ற 3 வசதிகள் இருக்கும்.

எந்த இடத்தில் உள்ளது?

ஸ்கிரீன் வலது புறம் தற்போது உங்கள் செல்போன் தற்போது எந்த இடத்தில் உபயோகத்தில் உள்ளது என்பதை Map மூலமாக தெரிந்துகொள்ளலாம்.

Play Sound : இந்த பட்டனை கிளிக் செல்தால் செல்போன் 5 நிமிடம் ஒலிக்கும். ஒருவேளை உங்கள் செல்போன் உங்கள் அருகில் எங்கையாவது இருந்தால் சத்தம் கேட்டு நீங்கள் எளிதில் தொலைபேசியை கண்டுபிடிக்கலாம்.

Lock : இந்த ஆப்சனை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் செல்போன் லாக் ஆகி விடும்.

Erase : இந்த ஆப்சனை கிளிக் செய்யும் பட்சத்தில் உங்கள் செல்போனில் உள்ள தகவல் அனைத்தும் அழிந்து விடும்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Tips #Mobile tips
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story