×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களே.! கொஞ்சம் இதை கவனியுங்கள்.!

ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களே.! கொஞ்சம் இதை கவனியுங்கள்.!

Advertisement

ஆன்லைன் ஷாப்பிங் என்பது இன்று பலருக்கும் பொழுது போக்காக மாறிவிட்டது. அது அளவோடு இருக்கும் வரை பிரச்சனை இல்லை. அது ஒரு வகை அடிமைத்தனமாக மாறுவதால் பல முக்கிய பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

குறிப்பாக ஆஃபர் என்ற பெயரில் தேவையில்லாத பொருட்களை கூட பார்த்த உடனே பலரும் வாங்க அவசரப்படுகின்றனர். வேலை செய்யும் நேரத்திலும் மற்றும் தூக்கத்திற்கு இடையில் கூட ஆஃபர் உள்ளதா என நோட்டமிடுகின்றனர். இது அவர்கள் நிலைமை கைமீறி ஆட்டுவிக்கப்படுகின்றனர் என்பதை காட்டுகிறது.

நம் வீட்டிற்கு அருகில் உள்ள கடைகளில் வாங்கிக் கொள்ளும் நிலையில் உள்ள பொருட்களைக் கூட ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்குகின்றனர். இதனால் நாம் கடையில் வாங்கும் செலவைவிட ஆன்லைனில் ஆர்டர் செய்யும் சில பொருட்களின் விலை மிக அதிகமாகவே உள்ளது. மேலும், சமூக தொடர்பே இல்லாமல் அவர்கள் அதிக தனிமைக்குள் செல்கின்றனர். அதே நேரத்தில் இவ்வாறு செய்வது சோம்பேறித்தனத்துக்கும் வழி வகுக்கிறது.

இதையும் படிங்க: லேப்டாப் தீப்பிடித்து வெடிக்கும் அபாயம்.. இந்த தவறை செய்யாதீங்க.. எச்சரிக்கும் நிபுணர்கள்.!

அடுத்ததாக, சிலர் கையில் பணம் இல்லாத நிலையிலும் கூட 'கிரெடிட் கார்டு' மற்றும் 'பே லேட்டர்' போன்ற வசதிகளை பயன்படுத்தி பலர் ஷாப்பிங் செய்கின்றனர். இதனால் தேவையில்லாத பண நெருக்கடியில் சிக்கி மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

இந்த அடிமைத் தனத்திலிருந்து மீள நினைத்தால், முதலில் நம்மை ஷாப்பிங் செய்ய தூண்டும் ஆஃப்களை மொபைலில் இருந்து நீக்கி விட வேண்டும். ஷாப்பிங் ஆப் நோட்டிபிகேஷன்களை ஆஃப் செய்து வைத்திருக்க வேண்டும். ஒரு பொருளை வாங்க தோன்றினால் அதனை கார்ட்டில் போட்டுவிட்டு 2 -3 நாட்கள் காத்திருக்க வேண்டும் அதன் பிறகு அப்பொருளை வாங்கும் ஆர்வம் குறைந்துவிடும்.

மாதத்திற்கு இவ்வளவு தான் ஆன்லைன் ஷாப்பிங் செய்ய வேண்டும் என்ற ஒரு எல்லையை நிர்ணயம் செய்ய வேண்டும். ஆன்லைன் ஷாப்பிங் என்பது நம் வாழ்க்கையாகவே மாறிவிடக் கூடாது. அது ஒரு வசதிக்காக மட்டுமே என்பதை உணர்ந்து பயன்படுத்த வேண்டும்.

இதையும் படிங்க: Health Tips: குட்டித்தூக்கம் போட ஆசையா? இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#e shopping #Online shopping #Addiction #Social media
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story