×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

300 மாணவர்களின் சாதனை! வெறும் 6 லட்சத்தில் ஓட்டுநரில்லாத சோலார் பேருந்து கண்டுபிடிப்பு

Driverless solor bus developed by 300 students

Advertisement

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள ஒரு கல்லூரியை சேர்ந்த 300 மாணவர்கள் இணைந்து பெட்ரோல், டீசல் இல்லாமல் வெறும் சோலார் மூலம் கிடைக்கும் சக்தியை கொண்டு இயங்கும் பேருந்தினை கண்டுபிடித்துள்ளனர். 

நமது நாட்டில் தினந்தோறும் ஏறி இறங்கும் பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனை சமாளிப்பதற்கு நமக்கு இருக்கும் ஒரே வழி மாற்று எரிபொருளான மின்சாரத்தை பயன்படுத்துவது தான். இதன் மூலம் காற்று மாசுபடுதலும் தவிர்க்கப்படுகிறது நேரடி மின்சாரத்தில் பேட்டரிகளை சார்ஜ் செயவதோடு சோலார் பேனல்கள் மூலம் சார்ஜ் செய்து இயங்கும் புதிய ரக பேருந்தினை கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள லவ்லி புரபஷ்னல் பல்கலைகழகத்தை சேர்ந்த 300 மாணவர்கள் பேராசிரியர்களின் உதவியுடன் இணைந்து பெட்ரோல், டீசல் இல்லாமல் வெறும் சோலார் மற்றும் பேட்டரி மூலம் இயங்கும் புதிய ரக பேருந்தினை வெறும் 6 லட்சம் செலவில் கண்டுபிடித்துள்ளனர். இந்த பேருந்தில் உள்ள புளூடூத் மற்றும் ஜிபிஎஸ் வசதி மூலம் 10 மீட்டர் இடைவெளியில் உள்ள மற்ற பேருந்து மூலம் ஓட்டுநர் இல்லாமல் இதனை இயக்கலாம். 

வெறும் பேட்டரி மற்றும் சோலார் மின்சாரத்தைக் கொண்டு இயங்குவதால் இந்த பேருந்து முற்றிலும் மாசு இல்லாமல் இயங்க கூடியது. டெல்லி போன்ற நகரங்களுக்கு இந்தவகை பேருந்துகள் உடனடி தேவை. 10 முதல் 30 பேர் வரை பயணம் செய்ய வசதியான பேருந்தினை ஒருமுறை சார்ஜ் செய்தால் 70 கி.மீ தூரம் 30 கி.மீ வேகத்தில் இயக்க முடியும். 

ஜனவரி 3 ஆம் தேதி ஜலந்தரில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற விழாவில் பல்கழைக்கழக மாணவர்கள் இந்த பேருந்தினை அறிமுகப்படுத்தினர். முதலில் இந்த பேருந்துகள் விமான நிலையங்களில் இயக்கப்படும் என்றும் இந்த ஆண்டு இறுதியில் மக்கள் பயண்பாட்டிற்கு விடப்படும் என்றும் கல்லூரி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#punjab #Solor bus #Jalandhar #Lpu students
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story